Bhuvneshwar Kumar: சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20

Bhuvneshwar Kumar: சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20
News Image

Bhuvneshwar Kumar IND Vs NZ: தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்களின் பணிக்காலம் முடிந்த உடனே, புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

4 ஆண்டுகளுக்குப் பின் புவனேஷ்வர் குமார் கம்பேக்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் அக்டோபர் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக இவர் கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் போது இந்திய அணிக்காக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவனத்தை ஈர்த்து சம்பவம் செய்த புவனேஷ்வர் குமார்..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், அந்த அணி அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வெல்ல மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். இரண்டு சீசன்களிலும் சேர்த்து 45 விக்கெட்டுகளை குவித்துள்ளார். அண்மையில் ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணிக்கு இவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது டி20 தொடரில் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த தொடரை புவனேஷ்குமார் தவறவிடுவார். 36 வயதான புவனேஷ்வரின் வருகையை தொடர்ந்து, நியூசிலாந்து தொடரில் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அபாரமான ஸ்விங் மற்றும் ஸ்லோ பால் போன்ற பல்வேறு வேரியேஷன்களை கொண்டுள்ள புவனேஷ்வரை களத்தில் காண ரசிகர்கல் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அகர்கள் வெளியே..! புவனேஷ்வர் உள்ளே..!

சிறப்பான ஆட்டத்திறன் இருந்தபோதிலும் மூத்த வீரர்களையே நம்பி இருப்பதை, முன்னாள் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் விரும்பவில்லை. இதன் காரணமாகவே புவனேஷ்வருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. அவரை அணியில் சேர்ப்பது தொடர்பாக மத்திய மண்டல தேர்வாளர் ருத்ர பிரதாப் சிங் கடுமையாக முயன்றும் எந்த பலனும் இல்லை.  ஆனால் தற்போது அஜித் அகர்கர் ஓய்வு பெற்ற பிறகு, இடைக்கால தலைவரான பிரக்யான் ஓஜாவிற்கு புவனேஷ்வரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர் மீண்டும் அணியில் இடம்பெற ருத்ர பிரதாப் வழிவகை செய்துள்ளார். இதுவரை 87 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தனது அனுபவத்தைக் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2028 டி20 உலகக் கோப்பைக்கான சாத்தியமான வீரர்களாக கருதப்படும் மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்றவர்களுக்கும் அவரால் வழிகாட்ட முடியும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை

இந்திய அணி விவரம்:

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், ப்ரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks