Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை

Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
News Image

தமிழக அரசியலில் ஒரு முக்கியமான தலைவராக திகழ்பவர் அண்ணாமலை. தமிழக பாஜக-வின் தலைவராக பொறுப்பு வகித்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக-வில் இருந்து விலகி வீ த லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.

2031ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள அண்ணாமலை நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

மோடி நல்லது செய்தால் பாராட்டுவோம்:

நம்முடைய கருத்துக்கள். நாட்டில் தவறு என்று ஒரு விஷயத்தைப் பார்த்தால் நாம் பேச வேண்டும். மோடி நல்லது செய்யும்போது அருமையான பிரதமர். நல்லது செய்யட்டும், துணை இருப்போம் என்று எப்போதும் சொல்வோம்.

அதே நேரத்தில் இன்று சிஜேபி என்று ஒரு கட்சி உள்ளது. இந்தியாவில் இளைஞர்களை எல்லாம் திரட்டி போராடி பல இடங்களில் பேசுகிறார்கள். சிஜேபி கட்சிக்கு நமது வீ த லீடர்ஸ் அமைப்பு ஆதரவு அளிக்குமா? என்று கேட்டால் எப்போதும் நாம் கொடுக்கமாட்டோம். காரணம் நம்முடைய இலக்கு வேறு. அவர்களுடைய இலக்கு வேறு.

நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம். CJP கட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
— K.Annamalai (@annamalai_k) October 22, 2026

தூங்கிக் கொண்டு இருந்தீர்களா?

அதேசமயம், சிஜேபி கட்சி இந்தியாவில் போராடுவதற்கு உரிமை இருக்கிறதா? என்றால் இருக்கிறது. திமுக-விற்கு போராடுவதற்கு உரிமை இருக்கிறதா? என்றால் இருக்கிறது. ஒரு ஸ்ப்ரிங்கை அழுத்தினால் அவ்வளவு வேகமாக அது மேலே வரும். அதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிஜேபி-யில் இருப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒரு பிரச்சினையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி வாக்காளர் பட்டியல் சரியாக இல்லை என்றால், வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்தபோது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்தது. வீடு, வீட்டிற்கு வந்தார்கள். கேட்டார்கள். அனைத்து கட்சியின் பூத் ஏஜெண்ட் வீடு, வீடாக போயிட்டு வந்தார்கள். அன்று தூங்கிக் கொண்டு இருந்தீர்களா?

நாங்களும் வாழ வேண்டும்:

தேர்தல் நடந்து முடிவுகள் வந்து புதிய முதலமைச்சரை உட்கார வைத்து, அவர்கள் அமைச்சரவையிலும் இடம்பிடித்து 6 மாதம் கழித்த பிறகு வாக்காளர் பட்டியல் சரியில்லை என்று வந்துள்ளார்கள். அதையும் நாங்கள் சுட்டிக்காட்டுவோம். எதற்கு இன்று வந்து டிராமா பண்றீங்க?

உங்களுக்கு தனி மனிதர் மீது பிரச்சினை இருந்தால் தனி மனிதர் மீது பிரச்சினை இருப்பதை கூறுங்கள். ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம் சரியில்லை, தேர்தல் ஆணையம் சரியில்லை என்றால் இந்த நாட்டில் நாங்களும் வாழ வேண்டும். நீங்க மட்டும் வாழவில்லை.

சிஜேபி மாணவர்களை கைது செய்தால் கைது செய்யுங்கள், சிறைக்கு அனுப்புங்கள். தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள். அதை சரியான முறையில் செய்யுங்கள் என்று சொல்வதும் நாம்தான். நம்மைப் பொறுத்தமட்டில் தராசு தட்டில் எப்படி நடுவில் இருக்கிறமோ? அதுபோல இருக்க வேண்டிய காலமும், கட்டாயமும் நமக்கு இருக்கிறது.

விரிய வேண்டும்:

நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நாம் அனைவருக்குமான இயக்கம். நாம் ஒரு சித்தாந்தத்திற்கோ, ஒரு தலைவனுக்கோ, ஒரு விஷயத்திற்கு இயக்கமாக இருந்தால் சுருங்கிவிடுவோம். நாம் சுருங்குவதற்காக தமிழ்நாட்டில் இல்லை விரிவதற்காக இருக்கிறோம். ஆலமரமாக வளர்வதற்கு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்களை இணையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பான நபராக காணப்பட்டவர் அண்ணாமலை. ஆனால், தமிழக பாஜக-வில் இருந்து விலகிய பிறகு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தவர் தற்போது மெல்ல மெல்ல தனது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks