Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்

Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
News Image

Annamalai On BJP: கேள்வி கேட்டாலே அந்நிய கைகூலி என முத்திரை குத்திவிடுகின்றனர் என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்டால் அந்நிய கைகூலியா?

பாஜக முன்னாள் மாநில தலைவரும், வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை சிஜேபி அமைப்பின் போராட்டம், அதன் நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்காமல் அலைகழித்தது தொடர்பான தனது கருத்தால் வெடித்த தனிமனிதா தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.

CJP-க்கு உரிமையுண்டு

CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன். ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்னையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால் நிச்சயமாக ஆம் என்பேன். எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அண்ணாமலை அடுக்கிய கேள்விகள்:

போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?

டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?

அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?

எட்டு பிணை உத்தரவாதங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? பிணை உத்தரவாதம் அளிக்க வந்த நபரிடம் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் குறுக்கு விசாரணை நடத்தினார்?

இதையும் படியுங்கள்: Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்

பாஜகவினர் பிணைகளை மீறியதில்லையா?

கடந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் காலங்களில், டெல்லியில் பாஜக தொண்டர்கள் யாரும் பிணை நிபந்தனைகளை மீறியதில்லையா? அப்போது தடுப்புகளைத் தாண்டிச் சென்றதும், காவல்துறையின் உத்தரவுகளை மீறியதும் இதே டெல்லி காவல்துறையின் கண்காணிப்பில்தானே நடந்தன? அப்போது அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது? இப்போது நடப்பதைப் போலவா? நிச்சயமாக இல்லை என்பதே நிஜம். எனது கேள்வி மீண்டும் இதுதான். பாஜக உண்மையில் CJP அமைப்பை எதிர்க்கிறதா? அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கிறதா? CJP-ஐ ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பாஜக விரும்புகிறதா?

முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்:

எதற்கெடுத்தாலும் தேசவிரோதி’என்று முத்திரை குத்தும் போக்கு இதோடு போதும். வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA), மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து விசாரணை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையையும், வெளிநாட்டு சக்திகளால் நிதியளிக்கப்படுவதாகவும் தேசவிரோதச் செயலாகவும் சித்தரிப்பதைப் பார்க்கிற போது, உண்மையிலேயே சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. டெல்லியில் மத்திய அரசு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தன்னைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்வதற்காக எப்போதும் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வலுவாக ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம்” என அண்ணாமலை பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks