Chennai to Arakkonam AC Train: சென்னை புறநகர் ரயில்சேவையில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது ஏசி ரயில் வழித்தடம் இதுவாகும்.

சென்னை - அரக்கோணம் ஏசி ரயில் சேவை:

சென்னை தொடங்கி அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் அக்டோபர் 23ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரையில், சோதனை முயற்சி அடிப்படையில் ஏசி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக 12 ரயில் பெட்டிகளை கொண்ட உள்ளூர் ரயில் பயன்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சென்னை தொடங்கி செங்கல்பட்டு வழித்தடத்தில் முதல் முறையாக ஏசி ரயில்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை -அரக்கோணம் வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஏசி ரயில் பயண திட்டம்:

திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை என வாரத்தின் ஐந்து நாட்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. 3 ஜோடிகள் அடங்கிய ரயில்களானது நாளொன்றிற்கு மொத்தமாக 6 முறை பயணிகளுக்கான சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் டூ ஆவடி, சென்னை சென்ட்ரல் டூ அரக்கோணம் மற்றும் ஆவடி டூ அரக்கோணம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையிலான முதல் ஏசி ரயில் சேவைக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, தற்போது சென்னை டூ அரக்கோணம் வரையிலான வழித்தடத்திலும் ஏசி ரயில் சேவை இயக்கப்பட உள்ளன.

Southern Railway introduces 12-car Air-Conditioned EMU services on the Chennai – Arakkonam line, on a trial basis. Connecting Chennai Central, Perambur, Ambattur, Avadi, Tiruvallur and Arakkonam. Watch the video for the timings. #SouthernRailway #EMU #Chennai #Arakkonam #IndianRailways

— Southern Railway (@GMSRailway) October 21, 2026

ஏசி ரயில்கள் புறப்படும் நேரம்

இந்த பட்டியலில் முதல் ரயிலானது ஆவடியிலிருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி அரக்கோணத்தை காலை 7.45 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து காலை 8 மணியளவில் தொடங்கி சென்ட்ரல் ரயில் நிலையத்தை காலை 9.30 மணியளவில் வந்து சேரும். சென்ட்ரலை நோக்கிய இந்த வேகமான பயணத்தின் போது ரயிலானது திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர் மற்றும் பேசின் ப்ரிட்ஜ் ஆகிய நிலையங்களில் ரயிலானது நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு ரயிலானது காலை 9.40 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று 10.25 மணியளவில் ஆவடி சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாலை நேரத்தில் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 5.25 மணியளவிலும்,அங்கிருந்து அரக்கோணத்திற்கு 6.30 மணியளவிலும், அங்கிருந்து ஆவடிக்கு 8.10 மணியளவிலும் ரயில் சேவை தொடங்க உள்ளது. சுமார் 74 கிலோ மீட்டர் நீளத்திற்கான சென்னை தொடங்கி அரக்கோணம் வரையிலான பயணத்திற்கான, டிக்கெட் கட்டணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்

ஏசி ரயிலில் வசதிகள்:

இந்த சேவைகளுக்காக சென்னையில் உள்ள இன்டெக்ரல் கோச் ஃபேக்டரியால் தயாரிக்கப்பட்ட, சுமார் 5,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில்களில் முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தானியங்கி நழுவுக் கதவுகள், துருப்பிடிக்காத எஃகு இருக்கைகள், அகலமான ஜன்னல்கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான எல்இடி திரைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ரயில்களில், பயணிகளுக்கான அவசரக்காலடாக்-பேக் சிஸ்டம் மற்றும் 35% வரை மின்சார ஆற்றலைச் சேமிக்கக்கூடிய ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும்.

Source: Read Full Article