ABP நாடுவின் புதிய பரிணாமம் - ஸ்டாலின் வாழ்த்து

நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ABP நாடு செய்தி நிறுவனம் தமிழில் 24 மணி நேர டிஜிட்டல் செய்தித் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ”நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட ABP குழுமத்தின் ‘ 24 மணி நேர ஒளிபரப்பைத் தமிழில் தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். செய்திகளை முந்தித் தரும் வேகத்தைவிட, உண்மையை உறுதிசெய்து தரும் பொறுப்பே ஊடகத்தின் உயர்ந்த அறம்! அதிகாரத்திற்கு அஞ்சாமல், மக்களின் குரலாகவும் சமூகத்தின் மனச்சாட்சியாகவும் திகழ்ந்து, ஊடக அறத்துடன் ‘ABP நாடு’ மேலும் சிறக்க வாழ்த்துவதாக” ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ABP நாடுவிற்கு அமைச்சர் நிர்மல்குமார் வாழ்த்து

அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “ஆறு இந்திய மொழிகளில் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமாகவும், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி டிஜிட்டல் செய்தித் தளமாகவும் செயல்பட்டு வரும், நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ABP செய்தி நிறுவனம், தென்னிந்தியாவில் முதன்முறையாகத் தமிழில் கால் பதித்து, இன்று 24 மணி நேர டிஜிட்டல் செய்தித் தொலைக்காட்சியாகப் பரிணமித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையின் பெருமையையும் கடமையையும் காத்து, மக்கள் நலன் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து வழங்கிடும் ABP நாடு நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

”பல சாதனைகளை படையுங்கள்” அன்புமணி வாழ்த்து

இதே போல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ”ஏபிபி நாடு 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி ஊடக உலகில் புதிய சாதனைகளை படைக்கட்டும் என தெரிவித்துள்ளார். மேலும் ஏ.பி.பி செய்தி குழுமத்தின் தமிழ் இணையச் செய்திப் பிரிவான ABP Nadu அதன் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 1998-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல மொழிகளில் செய்தி ஊடகங்களை நடத்தி சாதனை படைத்து வரும் ABP Network குழுமம், அவர்களின் வலிமையான செய்திக் கட்டமைப்பைக் கொண்டு தமிழில் மக்களுக்கு பயனுள்ள செய்திகளை வழங்குவார்கள் எனவும் அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ABP Nadu 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியின் பயணம் வெற்றிகரமாக அமையவும், தமிழ் செய்தி ஊடக உலகில் புதிய சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகள்” என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை தர்மத்துடன் செயல்பட வாழ்த்து - அண்ணாமலை

வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ”நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ABP குழுமம், வாயிலாகத் தமிழில் 24 மணி நேரச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக, மக்கள் நலனையும் சமூகப் பொறுப்பையும் முன்னிறுத்தி, நேர்மையான பத்திரிகைத் தர்மத்துடன் செயல்பட்டு, தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய செய்தித் தளமாக ABP நாடு ஊடகம் விளங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.

இன்பதுரை வாழ்த்து

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஊடகத் துறையில் நூறாண்டு பாரம்பரியம் கொண்ட ABP செய்தி நிறுவனத்தின் தமிழ் டிஜிட்டல் ஊடகமான ABP நாடு, 24 மணி நேரச் செய்தி நேரலையைத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி! Smart TV மற்றும் செயலி (App) மூலம் செய்திகளை நாள்முழுக்க நேரலையில் காணும் வண்ணம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சிக்கு எனது பூபாள வாழ்த்துகள்! உண்மை ஓயாமல் ஒளிரட்டும்! உறங்காது ஒலிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி பெற வாழ்த்து - தமிமுன் அன்சாரி

இதே போல மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் டிஜிட்டல் ஊடக உலகில் புதிய வரவாக abp நாடு செய்தி தொலைக்காட்சியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளவர், ஊடக உலகில் அதன் பயணம் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article