நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
News Image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 செ.மீ., கோத்தகிரியில் 20 செ.மீ. மழை பதிவாகி இருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் வார்னிங்

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை வரை அதே பகுதியல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well Marked Low Pressure Area)நிலவுகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) அதே பகுதிகளில் நிலவக்கூடும். மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), மேலும் வலுப்பெற்று 26ம் தேதியில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் (Cyclonic Storm) மாறக்கூடும். இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப்பகுதிக்கு அருகில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

அதேபோல் நாளை தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks