7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
News Image
பீரங்கி, FLIGHT எல்லாம் Cash On Delivery போடுறாங்க டெலிவரி பண்றவங்க வீட்டில் போராட்டமே நடத்திட்டாங்க-  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி.
ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த BE மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான வீரமணி. அதே ஊரைச் சேர்ந்த சுமங்கலி என்ற எம் ஏ பி ஏட் பட்டதாரி பெண்ணை திருமணம் முடித்து மதுரையில் அனுப்பானடி பகுதியில் வசித்து வந்து வீரமணி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பொழுது போக்கிற்காக இன்ஸ்டாகிராம் யூடியூப் ஆகிய சமூகவலைதளங்களில் வீரமணி வீடியோ பதிவிட்டு  வந்துள்ளார்.
இவருடைய வீடியோ நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனக்கு தீபாவளிக்கு ஸ்வீட் வேண்டுமென கோரி வீடியோ ஒன்றை பதிவு செய்தார் அதில் தனது மொபைல் எண் மற்றும் வீட்டு முகவரியை கூறி அதனை கமெண்டில் பின் செய்திருந்தார். இதனைப் பார்த்த அவரது பாலோவர்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வாசிகள் வீரமணியின் முகவரியை google பக்கத்தில் பதிவிட்டதோடு அமேசான் பிளிப்கார்ட்  Zepto blinkit மற்றும் zomato swikky என அனைத்து பிரபலமான டெலிவரி நிறுவனங்கள் மூலமாக கேஷ் ஆன் டெலிவரி என்ற முறையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பீரங்கி , Flight, டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் என பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்
மேலும் 20 கிலோ தலப்பாக்கட்டு பிரியாணி எனத் தொடர்ந்து உணவுகளையும் கேஷ் ஆன் டெலிவரி என்ற அடிப்படையில் ஆர்டர் செய்துள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக வீரமணியின் வீட்டிற்கு ஆன்லைன் டெலிவரி செய்யும் ஆட்கள் அதிகளவிற்கு வருகை தந்த நிலையில் வீரமணியும் தான் ஆர்டர் செய்யவில்லை என கூறியதால் அடுத்தடுத்து வரக்கூடிய டெலிவரி ஊழியர்கள் வீர மணியோடு வாக்குவாதம் செய்யும் அளவிற்கு போராட்டம் நடத்தி வந்துள்ளனர். மேலும் உணவகங்களின் மேலாளர்களே நேரடியாக வீரமணியிடம் பேசி எச்சரிக்கை விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் Cash On  டெலிவரி குறித்து வீடியோவில் பதிவு செய்து கெஞ்சி கேட்டும் கூட தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வர தொடங்கியதால் வீரமணியும் அவரது மனைவியும் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆகியும் பல கோரிக்கை விடுத்தும் கூட கேஷ் ஆன் டெலிவரி பார்சல்கள் அடுத்தடுத்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆனாலும் வீரமணி மற்றும் சுமங்கலி ஆகிய இருவரும் தற்போது வீட்டில் உள்ள பொருட்களை விற்றுவிட்டு அவர்கள் சொந்த ஊருக்கே புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் எங்களுக்கு ஆர்டர் போடுவதை நிறுத்திக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜாலியா வீடியோ போட ஆரம்பிச்சேன், சொந்தமா ஜெராக்ஸ் கடை ஆரம்பித்து சின்ன சின்னதாக வீடியோ போட்டேன். அப்போது இருந்து எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். அதை எல்லாம் நான் விளையாட்டாக பார்த்து கடந்து சென்று கொண்டிருந்தேன்.  திடீரென ஒரு நாள் என்னோட பாலோவர் ஸ்வீட் பாக்ஸ் அனுப்புகிறேன், உங்கள் அட்ரசை அனுப்புங்கள் என நண்பர் கேட்டார். நானும் நம்பி அனுப்பினேன். ஆனால் அது இவ்வாறாக வந்து நிற்கும் என்று நினைக்கவில்லை.
அந்த நம்பரை அட்ரஸை Pin பண்ணி விட்டார். இதனைப் பார்த்து நிறைய நபர்கள் CASH ON DELIVERYல் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் டிவி, பீரங்கி , Flight ஆர்டர் போட்டு விட்டார்கள்  இதனால் ரொம்ப மன உளைச்சல் ஆகிவிட்டது. எங்களுக்கும் மன உளைச்சல் ஊழியர்களுக்கும் மன உளைச்சல் அவர்களும் சிரமப்படுகிறார்கள். தலப்பாக்கட்டு பிரியாணி 10 கிலோ 20 கிலோ என்ன ஆர்டர் போட்டுவிட்டார்கள் அவர்களை நிறைய சிரமப்பட்டு விட்டார்கள். அனைவரும் வந்து எங்களை தான் திட்டுகிறார்கள் நாங்கள் சொன்னாலும் நம்ப மாட்டிக்கிறார்கள். நீங்க தான் அதற்கு பொறுப்பு என சொல்கிறார்கள். நாங்கள் இதற்கு காரணம் இல்லை என கூறினாலும் திட்டுகிறார்கள். ஊழியர்கள் எல்லாம் வந்து போராட்டம் நடத்தி விட்டார்கள் மேலாளர்கள் வந்து வாக்குவாதம் ஆகிவிட்டது. இது ரொம்ப பிரச்னையாகும் என ஊருக்கு போய் விட்டோம். வீட்டை காலி பண்ணி விட்டோம் சொந்த ஊருக்கு போக போறோம்.
சமூக வலைதளங்களை பார்த்து பயன்படுத்துங்கள்.
பொது வலைதளத்தில் எங்களைப் போன்று எங்களை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள் அட்ரஸோ போன் நம்பரோ கொடுக்காதீர்கள் எங்கள மாதிரி ஊரை விட்டு காலி பண்ண நிலைமைதான் வரும். காலிங் பெல் அடித்தாலே பயந்து பயந்து வாழ வேண்டியதாக இருக்கிறது நிம்மதியே இல்லை. கேரளா காவல்துறையினர் என்னை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு செய்தது மகிழ்ச்சி. கேரளா மக்கள் மற்ற மாநில மக்களுக்கு என் நன்றி. இதை  விழிப்புணர்வாக எடுத்துக் கண்டு கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பார்த்து பயன்படுத்துங்கள். யாருக்கு எதை ஆர்டர் செய்தாலும் எனக்கென்று சொல்லவில்லை யாருக்கு எதை செய்தாலும் பணம் கொடுத்து விட்டு செய்யுங்கள். யாராவது அதை அனுப்புகிறேன் என காசு கொடுக்கிறேன் என சொன்னாலும் நம்பரும் அட்ரஸ் தயவு செய்து கொடுத்துவிட வேண்டும். தொடர்ந்து அடுத்து நல்ல நல்ல வீடியோக்களை நான் நிச்சயம் போடுவேன். எனக்கு இதுவரை ஆதரவு தெரிவித்து அன்பு செலுத்தி அனைவருக்கும் நன்றி  என்றார்.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks