சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்

சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
News Image

Chennai New Beach: புலிகாட் தொடங்கி மகாபலிபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளை ஆராய்ந்து புதிய கடற்கரைகளை அமைக்க CMDA நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னைக்கு புதிய கடற்கரைகள்..!

சென்னை மக்களின் பல தசாப்தகால காத்திருப்புக்குப் பிறகு, ஒருவழியாக பெருநகராமனது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய கடற்கரைகளை பெற உள்ளது. இதற்கான ஆய்வுகளை புலிகாட் தொடங்கி மகாபலிபுரம் வரையிலான கடலோரப்பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூங்கில்களை கொண்டு குடில்கள், நாற்காலிகள் போன்றவற்றை அமைப்பது மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது தொடர்பான பரிசீலனைகளும் அடங்கும்.

5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம்:

5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, அதவாது தற்போதைய 1,189 சதுர கிலோமீட்டர் திட்டமிடல் பகுதியை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரிய விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான (CMA) விரிவான முழுமையான திட்டத்தை (master plan) தயாரிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளதாம். இதற்காக ஒரு சர்வதேச ஆலோசகரும் நியமிக்கப்பட உள்ளாராம். இந்த திட்டத்தின் வாயிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சிஎம்ஏ-வுடன் இணைக்கப்படவுள்ளனவாம். இந்தத் திட்டம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது.

புதிய வளர்ச்சி திட்டங்கள்:

தற்போதுள்ள 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதன் உச்ச நிலையை எட்டியுள்ளதாகவும், இனி இந்த பகுதியில் புதியதாக வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது என்பது சிரமம் எனவும் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேநேரம், விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகரப் பகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குப் புதிய திட்டங்களை நாம் வகுக்க முடியுமாம். எதிர்கால வளர்ச்சி எங்கு, எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும், அதை முறைப்படுத்த என்னென்ன விதிகள் தேவை என்பதையும் ஆலோசகர் விர்வான திட்ட அறிக்கை மூலம் சமர்பிக்க உள்ளார்.

புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

கடற்கரை ஓரப்பகுதிகளை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவது புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்குமாம். சில இடங்களில் நிலத்தடி நீர் வள மண்டலங்கள் உள்ளன. கடற்கரைச் சுற்றுலா, பொழுதுபோக்கு வசதிகள், தற்காலிகக் கடைகள் மற்றும் பிற பொது வசதிகளுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட உள்ளன. கடற்கரை நெடுகிலும் ஆங்காங்கே என கட்டுமானங்களை அனுமதிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பகுதிக்கும் எந்த வகையான வளர்ச்சி பொருத்தமானது என்பது தீர்மானித்து ஒப்புதல் அளிக்கப்பட உள்ளனவாம்.

இதையும் படியுங்கள்: TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

இதுபோக பரந்த மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாலைகள், எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கும் வகையிலான சாலை கட்டமைப்பு, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அத்தகைய சூழலிலும் தாக்குப் பிடிக்கக்கூடிய வகையிலான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது,  குடியிருப்பு, வணிகம், தொழில், பொழுதுபோக்கு மற்றும் பொதுக் கட்டமைப்பு எனப் பல்வேறு வகையான வளர்ச்சிகள் எங்கு அமைய வேண்டும் என்பதையும், அதற்கான சாலைகள் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் புதிய வளர்ச்சி திட்டம் தீர்மானிக்க உள்ளதாம்.

2 ஆண்டுகள் காலக்கெடு:

புதிய முழுமையான பெருநகரத் திட்டத்தை நிறைவு செய்யக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகுமாம். பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் நிலையை எட்டும் சூழலில் சென்னை இருப்பதால், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதோடு, பயணத்தின் இறுதிப் பகுதி வரையிலான இணைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை அரசு கவனித்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். எதிர்பார்த்தபடி இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சென்னைக்கு புதிய கடற்கரைகள் கிடைப்பதோடு, அகலமான இணைப்பு சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மேம்படுத்தப்படும். கடல் உணவு தொடர்பான உட்கட்டமைப்பு வலுவடைவதோடு, சென்னையை தாண்டி காஞ்சிரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் வளர்ச்சி பரவலாக்கப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks