சென்னை தாம்பரம் அடுத்த படப்பை அழகூர் பகுதியைச் சேர்ந்த தீபக் ( 27). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (27). இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம்

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு காதல் மனைவி ராஜேஸ்வரி தான் வேலைக்கு சென்ற பிறகு செல்போனில் யாருடன் பேசுகிறார், எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்று கணவர் தீவிர கண்காணித்து வந்துள்ளார். பின்னர் அடிக்கடி ராஜேஸ்வரியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் காதல் மனைவி என்று கூட பாராமல் கடுமையான வார்த்தைகளால் பேசி மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

கணவன்-மனைவி இடையே தகராறு

அதுமட்டுமல்லாமல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்து போன ராஜேஸ்வரி இனிமேல் இந்த வாழ்க்கையே தேவையில்லை என்று தீர்மானித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்ற குடும்பத்தினர் வீட்டில் வந்து பார்த்த போது ராஜேஸ்வரி சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனரீதியான துன்புறுத்திய கணவர்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் காதல் மனைவியின் செல்போனை பறித்து மனரீதியான துன்புறுத்தியது தெரியவந்ததை அடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர். திருமணமான 4 மாதங்களில் ராஜேஸ்வரி உயிரிழந்ததால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article