ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
News Image

ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை 46 ரூபாய்க்கு வாங்கியது மத்திய மின்சார அமைச்சகத்தின் தவறுதான் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறியுள்ளார்.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46

ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.46-க்கு கொள்முதல் செய்துள்ளது. இதுவே நாட்டின் மிக உயர்ந்த கொள்முதல் ஆகும். அம்மாநிலம்  330 மெகாவாட் திறன் கொண்ட தோல்பூர் எரிவாயு மின்நிலையத்தில் இருந்து நாட்டின் மிக அதிக விலை கொண்ட மின்சாரத்தைப் பெற்று வருகிறது. அக்டோபர் மாதத்தில் இங்கு மின் உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ரூ.46.09 வரை உயர்ந்தது. அக்டோபர் முதல் 12 நாட்களில், இந்த மின்நிலையம் ரூ.30 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மின்சாரத்தை விநியோகித்துள்ளது. இதன் உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ரூ.41 முதல் ரூ.46 வரை இருந்தது.

மத்திய மின்சார அமைச்சகத்தின் தவறாகும்

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனால், மின்சார கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் விளக்கமும் கொடுத்திருந்தார். தற்போது, ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46க்கு கொள்முதல் செய்யப்பட்டதற்கு மத்திய மின்சார அமைச்சகத்தின் பெரும் தவறே காரணம் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.46.09 செலவிடுவதாக கட்டுரை கூறுகிறது. இது, மத்திய அரசின் தேசிய தேவை முன்னறிவிப்பு மற்றும் போதுமான திட்டமிடல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில், மத்திய மின்சாரத் துறை நிறுவனங்களைப் போல் இல்லாமல், தனிப்பட்ட மாநிலங்களுக்கு நாடு தழுவிய மின்சாரத் தேவை மற்றும் உற்பத்தி இருப்பு குறித்த தெளிவான பார்வை குறைவாகவே உள்ளது.

இத்தகைய தேவை, விநியோக இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டு திட்டமிடப்படவில்லை என்பதை மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும். குறைந்தபட்சம் இப்போதாவது, மத்திய மின்சார அமைச்சகம் தேசிய அளவிலான முன்னறிவிப்பு மற்றும் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு குறித்து திட்டமிட வேண்டும். இது எதிர்காலத்தில் மாநிலங்கள் இதுபோன்ற கட்டுக்கடங்காத விலையுள்ள மின்சாரத்தைத் தவிர்க்க உதவும்’ என்று கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks