"சிறுமியை நம்ப வைத்து பாலியல் வன்முறை - வீடியோ பதிவேற்றம்"

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சிறுமியுடன் பழகிய அவரது ஆண் நண்பர் , சிறுமியை நம்ப வைத்து பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமியுடன் இருக்கும் போது, ஆண் நண்பருக்கு நெருக்கமான இருவர் வீடியோ எடுத்து , அதை, ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில், திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், 'போக்சோ' பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் , பெண்ணை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்தனர். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு , நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு

சிறுமியை நம்ப வைத்து ஏமாற்றியதுடன், வீடியோ எடுத்து , 41 ஆபாச தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது , சிறுமியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் , உடனடியாக வீடியோக்களை நீக்குவதுடன் , வேறு தளங்களில் வெளியாகாமல் தடுக்க வேண்டும்.

ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமின் மனுக்கள் அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டது ஏன் ? முதல் தகவல் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகளை காவல் துறை குறிப்பிட்டிருந்தும், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை ? இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில்,

41 தளங்களில் இருந்த வீடியோக்களில் , 25 தளங்களில் இருந்தவை நீக்கப்பட்டன.17 தளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, தெரிவிக்கப்பட்டது. வழக்கு மீண்டும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குறிப்பிட்ட 17 தளங்களில் இருந்து வீடியோவை நீக்க முடியா விட்டால், அந்த தளத்தையே முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தர விட்டனர்.

Source: Read Full Article