ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு

ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
News Image

"ரூ.36 லட்சம் பணம் பறிப்பு"

சென்னை கொளத்​தூர் சாஸ்​திரி நகர் மெயின் ரோட்​டைச் சேர்ந்த கந்​தன் ( வயது 52 ), பாரி​முனை வரத​முத்​தப்பா தெரு​வில் உள்ள மொத்த விலை மளி​கைக் ​கடை​யில் மேலா​ள​ராக வேலை செய்து வரு​கிறார். கடந்த 14-ம் தேதி மதி​யம் , முந்​தைய நாள் வியா​பார​மான ரூ.36 லட்​சத்தை வங்​கி​யில் செலுத்​து​வதற்​காக , கடை ஊழியர் கணேசனுடன் பணப்​பையை எடுத்​துக்​கொண்டு பாரி​முனை குடோன் தெரு​வில் நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு பைக்​கு​களில் வந்த மர்ம நபர்​கள், கந்​தனை ஹெல்​மெட்​டால் தாக்​கினர். தொடர்ந்து கணேசனைக் கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, அவர் வைத்​திருந்த ரூ.36 லட்​சம் அடங்​கிய பணப்​பையை பறித்​துக்​கொண்டு தப்​பிச் சென்​றனர்.

"வழிப்பறிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் கைது"

இந்த தாக்​குதலில் ரத்​தக் ​காயமடைந்த கந்தன், ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இது குறித்து பூக்​கடை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்து வழிப்​பறி​யில் ஈடு​பட்​ட​வர்​களை அடை​யாளம் கண்​டனர்.

இதையடுத்​து , வழிப்​பறி​யில் ஈடு​பட்ட சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த பாலாஜி ( வயது 28 ), பிராட்​வேயைச் சேர்ந்த சீனி​வாசன் ( வயது 29 ), கல்யாணபுரத்​தைச் சேர்ந்த விக்​னேஷ் ( வயது 30 ), விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்​டியைச் சேர்ந்த ஜெகன் ( வயது 19 ), தண்​டை​யார்​பேட்​டையைச் சேர்ந்த ஷாலினி ( வயது 27 ) ஆகிய 5 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து வழிப்​பறி செய்​யப்​பட்ட பணத்​தில் ரூ.1 லட்​சம் மீட்​கப்​பட்​டது. மேலும், குற்​றச் ​செயலுக்கு பயன்​படுத்​தி​யதாக ஒரு ஆட்​டோ​வும் பறி​முதல் செய்​யப்பட்​டது. போலீஸ் விசா​ரணை​யில், ஷாலினி ஏற்​கெனவே சம்​பந்​தப்​பட்ட மளிகைக்​ கடை​யில் வேலை செய்​து, சில ஆண்​டு​களுக்கு முன்பு பணியை விட்டு நின்​றவர் என்​பது தெரிய​ வந்​தது.

மேலும், இவர்​ தான் வழிப்​பறிக்கு மூளையாக செயல்​பட்​டுள்​ளார் என போலீஸார் தெரி​வித்​தனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்​பதும் விசா​ரணை​யில் தெரிய​ வந்​தது. கைது செய்​யப்​பட்ட 5 பேரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks