ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வருகிற 30 ஆம் தேதியன்று ஜி.எஸ்.எல்.வி - எப்18 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவையை வழங்கும் NAVIC-செயல்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2,232 கிலோகிராம் எடையுள்ள என்விஎஸ்-03 எனும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

NavIC என்றால் என்ன?

NavIC அதாவது Navigation with Indian Constellation எனும் சேவை இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது.இது அமெரிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் GPS-க்கு மாற்றாக கருதப்படுகிறது. இவ்வமைப்பு இருப்பிட வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு அணுகல் ஆகிய இருவகையான சேவைகளை வழங்குகிறது.
NavIC செயல்பாடு வலுப்பெறுவதன் மூலம் இந்தியாவின் நில மற்றும் கடல் எல்லை பாதுகாப்பு சார்ந்த பணிகள் தொய்வின்றி நடைபெறவும், வழிகாட்டுதலுக்காக பிறநாட்டு சேவைகளை அணுகுவதை தடுக்கவும் உதவுகிறது.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள்

தொடக்கத்தில் செயற்கை கோள்களை செலுத்துவதற்கு பிறநாடுகளை சார்ந்திருந்த இந்தியா பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்களை பயன்படுத்தி செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது.ஆனால் இந்த ராக்கெட்டுகளால் குறைவான உயரத்தில் மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடிந்தது. இதன் காரணமாக முக்கியமாக தகவல் தொடர்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு புவிநிலை வெளிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் Geosynchronous Satellite Launch Vehicle எனும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட். இந்த ராக்கெட்டில் கிரையோனிக் எஞ்சின் பயன்படுத்தப்படும் நிலையில், அதிக எடைக்கொண்ட
செயற்கைக்கோள்களை ஏவ இன்றியமையாததாக இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

Source: Read Full Article