அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!

அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
News Image

ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்களின் கோரிக்கைகளை சம்பள கமிஷன் அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். அண்மையில் பெங்களூரு வந்த சம்பள கமிஷன் அதிகாரிகளிடம் மத்திய அரசு ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஊதியம், பென்ஷன், பிட்மென்ட் ஃபேக்டர், படிகள் மற்றும் பணியாளர் கட்டமைப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 18,000 ரூபாயில் இருந்து 69,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்காக 3.833 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரை பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டனர்.

3.833 என்ற பிட்மென்ட் ஃபேக்டரை கணக்கில் கொண்டால் குறைந்தபட்ச பென்ஷன் தொகையும் தோராயமாக 9,000 ரூபாயில் இருந்து 34,470 ரூபாயாக உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. இதனை சம்பள கமிஷன் அதிகாரிகள் ஏற்றால் அரசு ஊழியர்கள் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய தொகையும் மும்மடங்கிற்கும் மேல் உயரும். சம்பள கமிஷன் சார்பாக திருத்தப்பட்ட ஊதிய கணக்கீடுகளை செய்வதற்கு 'அக்ராய்டு சூத்திரம்' ஒரு முக்கியமான அளவுகோலாகும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தகவல் தொடர்பு, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு போன்ற அத்தியாவசிய கூடுதல் செலவுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டன. எனவே, நவீன வாழ்க்கை முறை தேவைகளை பிரதிபலிக்கும் வகையில் அக்ராய்டு சூத்திரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் 7ஆவது சம்பள கமிஷனில் ஒரு குடும்பம் என்பது 3 அலகுகளாகக் (Units) கருதப்படும் முறை பின்பற்றப்பட்டது. ஆனால் 8ஆவது சம்பள கமிஷனில் குடும்பத்தை 5 அலகுகளாக கருத வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஊழியர் (1 அலகு) + வாழ்க்கை துணை (1 அலகு) + 2 குழந்தைகள் (ஒவ்வொன்றும் 0.8 அலகுகள்) + பெற்றோர்கள் (இருவரும் சேர்ந்து 0.8 அலகுகள்) என கொண்டு குடும்ப செலவை கணக்கிட்டு சம்பள உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதுள்ள ஆண்டு ஊதிய உயர்வு விகிதமான 3%-ஐ 6% ஆக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. அரசு ஊழியர்கள் மத்தியில் சிறந்த செயல்திறன், திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்கப்படுத்த தற்போதைய 3% ஊதிய உயர்வு விகிதம் போதுமானதாக இல்லை என்றும் 6% ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதே போல பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று சம்பள கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதன் பேரில் அரசுக்கு ஃபிட்மண்ட் ஃபேக்டரை பரிந்துரை செய்வார்கள். அரசு இதில் முடிவெடுத்து சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவினை எடுக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks