மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தசரா பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பந்தலுக்கு வெளியே நின்றிருந்தவர்கள் மழையில் நனையாமல் இருக்க உள்ளே சென்ற பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வந்ததால் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

முதலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக அதிகரித்தது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை அடுத்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி, முதல்வர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் முழு மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை இதுவரை 7 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து எப்படி நடந்தது?

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே விபத்து எப்படி நடந்தது தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலர் விசில் அடித்து மக்களை விரட்டியதாகவும், இதன் காரணமாக அங்கு திரண்டிருந்த மக்கள் அனைவரும், பந்தலுக்குள் கூட்டமாக நுழைந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

Source: Read Full Article