"திமுக முப்பெரும் விழா"

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் ;

கூட்டணியில் இருப்பவர்கள் எழுப்பும் உண்மையான கேள்விகளுக்குக் கூட பதில் அளிக்காமல் , சட்டமன்றத்தையே ஒரு மேடையாகவும், நாடகமாகவும், திரைப்படமாகவும் மாற்றியுள்ளனர்.

சட்டமன்றத்தில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் , மற்ற தலைவர்களை எள்ளி நகையாடுவதும் , அதிலிருந்து இரண்டு நிமிட ‘ரீல்ஸ்’ எடுத்து வெளியிடுவதுமே நோக்கமாக இருப்பது போன்று செயல்படுகின்றனர்.

தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்று நினைக்கும் தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் இதுபோன்ற செயல்பாடுகள் கோபத்தை ஏற்படுத்தும்.

தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் வந்தவர்கள் என்பதையும் , திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் நினைவில் வைத்து திமுகவினர் பேச வேண்டும்.

மேலும், பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சுட்டிக் காட்டிய கனிமொழி, பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்து திருமணம் செய்து கொள்வதற்காக கல்வியை நிறுத்திய காலத்தில் , அவர்களின் கல்வியை ஊக்குவிக்க திருமண உதவித் தொகை திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்.

பின்னர் பெண்கள் கல்லூரிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை கொண்டு வந்தார்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை கொண்டு வந்ததும் கலைஞர் ஆட்சி தான் எனக் கூறிய கனிமொழி, பெண்களின் கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் சொத்துரிமை ஆகியவற்றை உறுதி செய்வதில் திராவிட இயக்கம் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்

Source: Read Full Article