ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம், தமிழ்நாட்டை கடந்தும் உள்ளதை நாம் அறிவோம். அதே அளவிற்கு சற்றும் குறையாமல் தல எனவும், கேப்டன் கூல் எனவும் அழைக்கப்படும் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு, இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. சென்னை அணி என்றால் தோனி, தோனி என்றால் சென்னை எனும் அளவிற்கு தமிழக ஐபிஎல் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டவர் தோனி.

கடந்த ஐபிஎல்லில் விளையாடாத தோனி

கால் தசைக்காயம் காரணமாக கடந்த ஐபிஎல் சீசன் முழுவதும் போட்டிகளில் பங்கேற்பதை தோனி தவிர்த்து வந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனி பங்கேற்பாரா என்ற எண்ணம் சென்னை அணி ரசிகர்களிடையே மேலோங்கி உள்ள நிலையில், சமீபத்தில் பரவி வரும் தகவல் ஒன்று தோனியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆண்டு சீசனுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக பரவிவரும் தகவல்தான் அது.

ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் ட்விஸ்ட் ஆன பதில்

பெங்களூருவில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பீர்களா என கேட்கப்பட்டபோது, தான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பொறுத்தே ஐபிஎல் பங்கேற்பு குறித்த முடிவை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். டிசம்பருக்குள் தனது முடிவு என்னவென்பது தெரியவருமென தோனி குறிப்பிட்ட நிலையில், நவம்பர்-15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகளில் வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனி இல்லாத சென்னை அணியா?

ஐபிஎல் போட்டிகளில் தோனி பங்கேற்றால் அதை அவரது ரசிகர்களுக்கு திருவிழாபோல் கொண்டாடுவார்கள். கடந்த சீசனைப்போல் எதிர்பாராத விதமாக அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் கூட, குறைந்தபட்சம் அவர் சென்னை அணியில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. இந்நிலையில் தோனி இல்லாத சென்னை அணியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்கின்றனர் தோனியின் ரசிகர்கள் இல்லை இல்லை பக்தர்கள்.

Source: Read Full Article