டி20 உலகக்கோப்பையை 3 முறை வென்ற இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலகளவில் டி20 கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத அணியாக திகழும் இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.

200 டி20 வெற்றிகள்:

இரு அணிகளும் மோதிய முதல் இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஒரு பந்து மீதம் வைத்து அசத்திய இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது.

அதாவது, உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் 200 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்று மைல்கல்லை இந்தியா படைத்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 300 போட்டிகளில் ஆடியுள்ள இந்தியா 200 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 83 டி20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 7 போட்டிகள் டை-யில் முடிந்துள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. இந்திய அணி டி20 போட்டியில் அதிகபட்சமாக 297 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 74 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணிக்கு அடுத்தபடியாக டி20 கிரிக்கெட்டில் உலகிலே அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் தன்வசம் வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 304 போட்டிகளில் ஆடி 176 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 116 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 4 போட்டிகள் டை ஆகியுள்ளது. அதிகபட்சமாக 232 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 74 ரன்கள் எடுத்துள்ளது.

யார்? யார்? எவ்வளவு வெற்றி?

டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றி பெற்ற அணிகள் விவரம்:

1. இந்தியா - 200 வெற்றி ( 300 போட்டிகள்)

2. பாகிஸ்தான் - 176 வெற்றி ( 304 போட்டிகள்)

3. நியூசிலாந்து - 135 வெற்றி ( 269 போட்டிகள்)

4. தென்னாப்பிரிக்கா - 129 வெற்றி ( 235 போட்டிகள்)

5. இங்கிலாந்து - 128 வெற்றி ( 233 போட்டிகள்)

6. ஆஸ்திரேலியா - 127 வெற்றி ( 229 போட்டிகள்)

7. வெஸ்ட் இண்டீஸ் - 111 வெற்றி ( 260 போட்டிகள்)

8. இலங்கை - 105 வெற்றி ( 243 போட்டிகள்)

9. உகாண்டா - 101 வெற்றி ( 131 போட்டிகள்)

10. ஆஃப்கானிஸ்தான் - 99 வெற்றி ( 168 போட்டிகள்)

11. வங்கதேசம் - 89 வெற்றி ( 222 போட்டிகள்)

இந்திய அணி இதுமட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் ஆடிய 2வது அணி என்ற பெருமையும் உள்ளது. சர்வதேச அளவில் 300 போட்டிகளுக்கு மேல் ஆடிய மற்றொரு அணி பாகிஸ்தான் ஆகும்.

யாருக்கு எதிராக? எவ்வளவு?

இந்திய அணி இதுவரை எந்தெந்த அணிக்கு எதிராக எத்தனை போட்டிகளில் ஆடி வெற்றி பெற்றுள்ளது? என்பதை காணலாம்.

1. ஆஸ்திரேலியா - 22 வெற்றி ( 37 போட்டிகள்)

2. வெஸ்ட் இண்டீஸ் - 22 வெற்றி ( 36 போட்டிகள்)

3. இலங்கை - 22 வெற்றி ( 34 போட்டிகள்)

4. தென்னாப்பிரிக்கா - 21 வெற்றி ( 36 போட்டிகள்)

5. நியூசிலாந்து - 19 வெற்றி ( 33 போட்டிகள்)

6. இங்கிலாந்து - 18 வெற்றி ( 35 போட்டிகள்)

7. வங்கதேசம் - 17 வெற்றி ( 18 போட்டிகள்)

8. பாகிஸ்தான் - 14 வெற்றி ( 18 போட்டிகள்)

9. ஜிம்பாப்வே - 14 வெற்றி ( 17 போட்டிகள்)

10. ஆஃப்கானிஸ்தான் - 10 வெற்றி ( 12 போட்டிகள்)

11. அயர்லாந்து - 8 வெற்றி ( 10 போட்டிகள்)

12. நமீபியா - 2 வெற்றி ( 2 போட்டிகள்)

13. நெதர்லாந்து - 2 வெற்றி ( 2 போட்டிகள்)

14. ஐக்கிய அரபு அமீரகம் - 2 வெற்றி ( 2 போட்டிகள்)

15. அமெரிக்கா - 2 வெற்றி ( 2 போட்டிகள்)

16. ஹாங்காங் - 1 வெற்றி ( 1 போட்டிகள்)

17. ஸ்காட்லாந்து - 1 வெற்றி ( 2 போட்டிகள்)

18. ஜப்பான் - 1 வெற்றி ( 1 போட்டி)

19. நேபாளம் - 1 வெற்றி ( 1 போட்டி)

20. ஓமன் - 1 வெற்றி ( 1 போட்டி)

Source: Read Full Article