வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..

வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
News Image

இந்தியாவில் சைபர் குற்றங்கள், ஆன்லைன் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதற்கு பெரும்பாலும் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மோசடிகளை தடுப்பதற்காக மத்திய தொலைத்தொடர்பு துறை கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. இதன்படி வாட்ஸ் அப் , டெலிகிராம் பயன்பாட்டுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த சிம் பைண்டிங் (SIM-Binding) விதிகள் கட்டாயமாகின்றன. இந்த புதிய விதிகளின்படி, நீங்கள் எந்த கருவியில் அல்லது சாதனத்தில் வாட்ஸ் அப் , டெலிகிராம் செயலிகளை பயன்படுத்துகிறீர்களோ அந்த சாதனத்தில் அந்த சிம் கார்டு இருக்க வேண்டும். இதனை தான் சிம் பைண்டிங் என்கின்றனர். வரும் டிசம்பர் 31க்குள் அனைத்து செயலிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்படுள்ளது.

எனவே ஜனவரி 1 முதல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் போனிலேயே அந்த சிம் கார்டு இல்லை என்றால் உங்களின் வாட்ஸ் அப் கணக்கு செயல்படாமல் போகலாம். இதனால், பதிவு செய்த சிம் கார்டை போனில் வைத்திருக்காமல் செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். தங்கள் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை ஒரு மொபைலில் போட்டுவிட்டு, வாட்ஸ்அப் போன்ற செயலிகளை வேறு ஒரு சாதனத்தில் மட்டும் பயன்படுத்தி வருபவர்கள் சிக்கலை சந்திக்கலாம். சில பயனர்கள் செயலியில் கணக்கை பதிவு செய்த பிறகு, அந்த சிம் கார்டை மொபைலிலிருந்து வெளியே எடுத்துவிடுவார்கள். இனி அதுபோல செய்ய முடியாது. செயலி இயங்க சிம் கார்டு கட்டாயம் போனில் இருக்க வேண்டும்.

மொபைலில் சிம் கார்டு இல்லாமல், வைஃபை நெட்வொர்க் மூலமாக மட்டும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளை பயன்படுத்தி வருபவர்கள் இதில் சிக்கலை எதிர்கொள்வார்கள். ஒரே போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துபவர்கள், தாங்கள் எந்த எண்ணை வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமிற்கு பதிவு செய்துள்ளார்களோ, அந்த எண் அந்த போனில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

வழக்கமான சிம் கார்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் வடிவில் 'eSIM' பயன்படுத்துபவர்கள், தங்களின் டிஜிட்டல் சிம் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் வழக்கம் போல் வாட்ஸ் அப், டெலிகிராம் பயன்படுத்தலாம். இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் சாமானிய பெருமளவில் பணத்தை இழந்து வருகின்றனர். டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளில் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு இந்தியாவில் உள்ள மொபைல் எண்களை பயன்படுத்தி வாட்ஸ் அப், டெலிகிராம் கணக்குகளை தொடங்கிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அவற்றை இயக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகளை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ஒவ்வொரு கணக்கையும் கேஒய்சி சரிபார்க்கப்பட்ட ஆக்டிவாக இருக்கும் சிம் கார்டுடன் இணைப்பது இனி அவசியம்.பொதுமக்கள், வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமில் பதிவு செய்துள்ள மொபைல் எண் உங்கள் மொபைல் சாதனத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் eSIM பயன்படுத்தினால், அது சரியான முறையில் configured செய்யப்பட்டு செயல்படுகிறதா என்பதை சோதித்து கொள்ளுங்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks