சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
News Image

மதுரை மல்லிகைப் பூ

மதுரை மண, மணக்கும் மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி தொடர்ந்து மதுரையில் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் (18.10.2026) இன்றைய விலை நிலவரம்:

மதுரை மல்லி கிலோ ரூ.1800, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.1100, செவ்வந்தி ரூ.300, சம்பங்கி ரூ.350, செண்டு மல்லி ரூ.120, கனகாம்பரம் ரூ.2000 , ரோஸ் ரூ.350, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.400, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.500,  மரிக்கொழுந்து ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், 'பூக்களின் விளைச்சல் மிகக்குறைவாக உள்ளது. இதன் காரணமாக இரண்டு டன்னுக்கும் குறைவாகவே மல்லிகைப்பூவின் வரத்து உள்ளது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை காரணமாகவும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த சில நாட்கள் இதே விலை நிலவரம் நீடிக்கலாம்' என தெரிவித்தார். நாளை மல்லிகைப் பூ வின் விலை 2000 ஆக உயர வாய்ப்புள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks