தமிழக அரசு 13 மணல் குவாரிகளை கைவிடுக! காவிரி பாலைவனமாகும்: அன்புமணி எச்சரிக்கை

தமிழக அரசு 13 மணல் குவாரிகளை கைவிடுக! காவிரி பாலைவனமாகும்: அன்புமணி எச்சரிக்கை
News Image

சென்னை : தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 13 புதிய மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், ஆறுகளைப் பாலைவனமாக்கக் கூடாது என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, 13 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், குவாரிகளில் இருந்து யார்டுகளுக்கு மணலைக் கொண்டு வருவதற்காக 4 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும், அவற்றை மீண்டும் திறக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

புதிதாக திறக்கப்படவுள்ள மணல் குவாரிகளில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் தான் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் 2023&ஆம் ஆண்டில் மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே புதிய மணல் குவாரிகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் அந்த முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பால் திமுக ஆட்சியில் அது சாத்தியமாகவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைந்த ஒரு சில வாரங்களிலேயே மணல் குவாரிகளை திறப்பதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில், செயற்கைக் கோள் கண்காணிப்புடன் குவாரிகள் தொடங்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பில் செய்திகள் பரப்பப்பட்டன. எத்தகைய சூழலிலும் மணல் குவாரிகளைத் திறக்கக் கூடாது என்று கடந்த ஜூலை 14&ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் மணல் குவாரிகளைத் தொடங்கும் முயற்சிகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து, மணல் விற்பனையை ஒரு வாரத்திற்குள் ஆனலைன் முறையில் தொடங்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், முதல் கட்டமாக 13 மணல் குவாரிகள் வரை திறக்கப்படலாம் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. குவாரிகள் விஷயத்தில் திமுக அரசின் அணுகுமுறையையே தவெக அரசும் பின்பற்றுகிறது என்பதற்கு இதுவே சான்று.

மணல் குவாரிகள் மணல் கொள்ளைக்கும், அதன் வாயிலாக சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் தான் வழிவகுக்கும் என்பது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2023ம் ஆண்டில் 25 புதிய மணல் குவாரிகளைத் திறக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த போது, அவற்றில் இருந்து அதிகபட்சமாக 7.51 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் வெட்டி எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், வெறும் இரு ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட குவாரிகளில் மட்டுமே 27.70 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை ஆய்வில் தெரியவந்தது. மணல் குவாரிகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்தால் கூட, மணல் கொள்ளையை கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல.

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. அதில் செயற்கை மணல் ஆதாரங்கள் மூலம் 35 ஆயிரம் சரக்குந்து மணல் பெறப்படும் நிலையில், மீதமுள்ள 25 ஆயிரம் சரக்குந்து மணல், குவாரிகள் மூலம் பெறப்படும் ஒவ்வொரு சரக்குந்திலும் தலா 100 கன அடி கொண்ட 3 யூனிட் மணலை சராசரியாக ஏற்ற முடியும். அதன்படி புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு மணல் குவாரியில் இருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 1923 சரக்குந்துகளில், 5769 யூனிட் மணல் அள்ளப்படும். 13 குவாரிகளில் இருந்து ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும்.

இந்த அளவுக்கு மணல் எடுக்கப்பட்டால், திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு மணல் ஒரே ஆண்டில் அதிகாரப்பூர்வமாகவே எடுக்கப்படும் நிலை உருவாகும். அதிகாரப்பூர்வமாகவே இவ்வளவு மணல் எடுக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் ஒரு சில ஆண்டுகளில் வறண்டு, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகிவிடும். காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளை இதைவிட மோசமான முறையில் படுகொலை செய்ய முடியாது.

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு என்ற காரணத்தைக் கூறி மணல் குவாரிகளைத் திறப்பதை அனுமதிக்கவே முடியாது. கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க காவிரி பாசன மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறப்பது தான் ஒரே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்று வழிகள் உள்ளன. அந்த வழிகளையெல்லாம் ஆராயாமல், விருப்பம் போல மணல் குவாரிகளைத் திறப்பது சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் துரோகம்.

எனவே, தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks