" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
News Image

"ஒரு தலைபட்சமாக காதல் தொல்லை - கொலை மிரட்டல்"

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவில் அரசு பள்ளியில் சகோதரிகளான இருவர் படித்து வந்துள்ளனர். அக்கா 11ம் வகுப்பிலும் , தங்கை 10 - ம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர். இதில் 11 ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவன் கோபால் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலிப்பதாக தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கை டியூஷன் முடித்து விட்டு அரசு பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அவரை சந்தித்து மாணவன் கோபால் உனது அக்காவை காதலிக்க சொல் என்று தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும் அப்படி காதலிக்கவில்லை என்றால் உங்கள் இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார் கோபால். வீட்டிற்கு சென்ற மாணவி இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்து அழுதுள்ளார்.

"போக்சோ வழக்கு பதிவு"

அதனையடுத்து இளம் பெண்ணின் தாயார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் கோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

திருத்தணி சுற்றியுள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ச்சியாக சிறுவர்கள் இளைஞர்கள் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். திருத்தணியில் சமீபத்தில் இதனால் படுகொலை ஒன்றும் நடைபெற்றது. இதுபோல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு காரணமானவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks