இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டும்.

விநாயகர் சதுர்த்தி:

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்றாலே விநாயகர் சிலைகள்தான் பிரதானம் ஆகும். விதவிதமாக சிறியது முதல் பிரம்மாண்டமான அளவில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு சாலைகளில் பக்தர்கள் உற்சாகத்துடன் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விதவிதமான விநாயகர் சிலைகள்:

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணிகள் கடந்த இரு மாதமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே வழக்கமான விநாயகர் சிலைகளுடன் ட்ரெண்டிங்கிற்கு ஏற்ற விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதும் வழக்கம்.

விஜய் விநாயகர் சிலை:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் செய்த சைகையைப் போலவே கோட் - சூட் அணிந்த விநாயகர் சிலை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விநாயகர் சிலை விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

ஆர்சிபி விநாயகர் சிலை:

மேலும், ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்றி ஆர்சிபி அணியை கொண்டாடும் விதமாக ஆர்சிபி விநாயகர் சிலையும் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையின் விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜெயிலர் விநாயகர் சிலை செய்யப்பட்டு அந்த படம் வெளியான ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ள நிலையில், தற்போதும் ஜெயிலர் விநாயகர் விற்பனை நடந்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் விஜய்:

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய வீரர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவ உடையில் உள்ள விநாயகர் சிலை 2025ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டும் அந்த விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படம் மிகவும் பிரபலம் ஆகும். அந்த படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தை சுமந்து செல்லும் காட்சி மிக மிக பிரபலம். இதேகாட்சியை உணர்த்தும் வகையில் பாகுபலி விநாயகர் சிலை ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு சந்தைக்கு வருகிறது.

ட்ரெண்டிங் விநாயகர் சிலை:

இந்திய அளவில் வெற்றி பெற்ற மற்றொரு திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் ராமர் வேடத்தில் இருந்த காட்சியை உணர்த்தும் வகையில் ராமர் விநாயகர் சிலையும் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டும் அதேபோல விநாயகர் சிலை விற்பனைக்கு வருகிறது.

இந்த விநாயகர் சிலைகள் மட்டுமின்றி பள்ளி செல்லும் விநாயகர் சிலை, ஆசிரியர் விநாயகர் சிலை, டீன் ஏஜ் விநாயகர், சிக்ஸ்பேக் விநாயகர் சிலை என ட்ரெண்டிங்கில் உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Read Full Article