தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்க்கு அஜித் வாழ்த்து:

இந்த கூட்டத்தொடரில் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், விஜய் நடிகராக இருந்தபோது அவரது நேரடி போட்டியாளராக திகழ்ந்தவருமான அஜித் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சிறு வயது முதலே கார்பந்தயங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட அஜித், கடந்த சில வருடங்களாக உலகெங்கும் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக தனியாக ஒரு அணியை உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.

கொண்டாடி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்:

திரையுலகில் நேரடி போட்டியாளராக திகழ்ந்தபோதும் விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்து அஜித் ஒருபோதும் எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்தது இல்லை. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திலும் அஜித்தின் கருத்து விஜய்க்கு ஆதரவாகவே இருந்தது. தற்போது முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள அஜித்குமார், முதலமைச்சர் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

#CMJosephVijay 🔥🔥🔥🔥#AjithKumar #ThalapathyVijay pic.twitter.com/wWU7q3rwbK

— Jegan ebi (@jeganebenezar1) September 3, 2026

இந்த வார்த்தை விஜய் ரசிகர்களுக்கும், தவெக-வினருக்கும் மிகப்பெரிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து, அஜித்திற்கு விஜய் ரசிகர்கள் இணையத்தில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் இருவரது நட்பையும் வெளிக்காட்டும் வகையில் பல்வேறு மீம்ஸ்கள், வீடியோக்களை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கார் பந்தயத்தில் தீவிரம் காட்டும் அஜித்:

King is always the King. 👑🔥

No throne. No competition. Just dominance. 🐐💥#AjithKumar #Gladiators pic.twitter.com/W75wwFQtLy https://t.co/8bjGXZ8SEv

— Vasanth Raj (@vasanthraj001) September 3, 2026

விஜய் முழுவதும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது அஜித்தும் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அவர் புதியதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அஜித்குமார் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அவர் முன்புபோல அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. அரசியலில் ஒருபோதும் ஈடுபட வாய்ப்பில்லை என்று அஜித் திட்டவட்டமாக அறிவித்தாலும் அவரது வாழ்த்துகள் தவெக அரசுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

Source: Read Full Article