USA Russia: ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?

USA Russia: ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?
News Image

USA Russian Oil Bill: அமெரிக்காவின் புதிய மசோதாவில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

புதிய மசோதாவை நிறைவேற்றிய அமெரிக்கா:

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை,  அதிபர் ட்ரம்பிற்கு வழங்கக்கூடிய ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இந்த மசோதா தற்போது டிரம்பின் கையொப்பத்திற்காக அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எரிபொருட்கள வாங்கும் இந்தியா கடுமையாக பாதிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

100% வரி - எகிறப்போகும் விலை?

அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மசோதாவால் பெட்ரோல் நிரப்பும் ஒரு சாதாரண இந்தியருக்கு என்ன விளைவுகள் ஏற்படும்? ரஷ்ய கச்சா எண்ணெயை இழப்பதால், பெட்ரோல் விலைகள் தானாகவே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயரும் என்று பொருளல்ல. இதன் தாக்கம் இந்தியா மாற்று எண்ணெயை எங்கிருந்து வாங்குகிறது? உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் நிலை என்ன? சுத்திகரிப்பு ஆலைகளின் லாப வரம்பு, ரூபாய்-டாலர் பரிமாற்ற விகிதம் மற்றும் முக்கியமாக அரசாங்கமும் எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விலைகளை எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல்..!

கடந்த 2022ம் ஆண்டு வெடித்த உக்ரைன் போருக்கு பிறகு விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு மலிவு விலையில் கிடைக்கிறது. உலக வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, இந்தியா 2026 நிதியாண்டில் 40.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 30.3 சதவிகிதமாகும். ஜுலை 2026-க்குள், இந்தியாவின் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு 51 சதவிகிதமாக உயர்ந்திருக்குமாம். இந்தியா தனது பயன்பாட்டில் 88 சதவிகிதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, ரஷ்யாவின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டால், இந்தியா மிகப் பெரிய கச்சா எண்ணெய் மாற்று விநியோகஸ்தரை அணுக வேண்டி இருக்கும்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது உயரும்?

இந்தியா மட்டும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உள்ளூர் சுத்திகரிப்பாளர்களுக்கு மாற்று விநியோகஸ்தர்கள் கிடைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், பொருளாதார தடைகள் காரணமாக சர்வதேச சந்தையிலிருந்து கணிசமான நாடுகள் ரஷ்ய எண்ணெயை தவிர்த்தால், உலகளாவிய தேவை அதிகரிக்கக் கூடும். இதனால் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும்.

இந்தியா ஏற்கனவே நிலையற்ற சர்வதேச எண்ணெய் சந்தையை எதிர்கொண்டு வருகிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கடுமையாக உயர்ந்த பிரென்ட் கச்சா எண்ணெய், வியாழக்கிழமையன்று ஒரு பீப்பாய் சுமார் 105 டாலராக இருந்தது.

இதையும் படியுங்கள்: Coimbatore Airport: கோயம்புத்தூருக்கு அடிச்சது ஜாக்பாட் - 1,047 ஏக்கர், ரூ.2,136 கோடி செலவில் மெகா திட்டம் - முழு விவரம்

இந்தியாவிற்கான வாய்ப்பு என்ன?

அமெரிக்காவின் வரி விதிப்பிற்காக ரஷ்யாவின் சலுகை விலை கச்சா எண்ணெயை  இழப்பது இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிக செலவை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் சரிவு, சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கலாம். இதனால் பெட்ரோல், டீசல் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks