United Kingdom Breakup: ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள், பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஒருங்கிணைந்த இங்கிலாந்தில் இருந்து வெளியேற முடிவு

பிரிட்டன் எனப்படும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். அதில், “இந்தத் தீவுகள் முழுவதும் அரசியல் சூழல் என்பது மாறி வருகிறது. வரலாற்றிலேயே முதன்முறையாக, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள முதல் அமைச்சர்கள் அனைவரும் ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு உறுதியுடன் உள்ளனர். உலகெங்கிலும் இதைக் கவனித்து வரும் மக்களுக்கு, ஐக்கிய ராஜ்ஜியத்தின் காலம் முடிவுக்கு வருகிறது என்பதற்கு இதைவிடத் தெளிவான அறிகுறி இருக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் யார்?

ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் ஜான் ஸ்வின்னி, வேல்ஸ் முதலமைச்சர் ரூன் அப் லோர்வெர்த் மற்றும் வடக்கு அயர்லாந்தின் பிரதிநிதி மைக்கேல் ஒ நீல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கார்டிஃப் பகுதியில் நடந்த இதுதொடர்பான நிகழ்ச்சியில் அயர்லாந்தின் எதிர்க்கட்சி தலைவரான மேரி லோ மெக்டொனால்டும் நான்காவது நபராக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில், “"நமது தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை உண்டு. எந்தவொரு ஐக்கிய அரசாங்கத்திற்கும் ஜனநாயகத்தைத் தடுக்கவோ அல்லது நமது மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பார்கள் என்ற கொள்கையைச் சீர்குலைக்கவோ உரிமை இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல்முறை:

கடந்த மே மாதம் நடைபெற்ற வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் ப்ளைட் சிம்ரு வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த 1999ம் ஆண்டு அதிகாரப்பகிர்வு தொடங்கியதிலிருந்தே அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த தொழிலாளர் கட்சியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் நீட்சியாக பிரிட்டனின் மூன்று அதிகாரப் பகிர்வு நாடாளுமன்றங்களிலும் உள்ள மூன்று மிகப்பெரிய கட்சிகள், முதல்முறையாக சுதந்திரம் வேண்டும் என்ற கருத்தில் ஒரே நிலைபாட்டை கொண்டுள்ளன.

இங்கிலாந்து பிரதமர் சொல்வது என்ன?

ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தான் உள்ளது என்ற ஒருமித்த கருத்தின் அடிப்படையில், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி வளங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, “பிரதமர் ஒருங்கிணைந்த பிரிட்டன் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளார் என்றும், அரசியல் விவாதங்களை விட பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதில் கவனம் செலுத்துகிறார்” என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் ஸ்காட்லாந்திற்கான எதிர்க்கட்சி தலைவர், புதிய ஒப்பந்தம் கையெழுத்தான கூட்டத்தை பிரிவினைவாத உச்சிமாநாடு என்றும், வெளிப்படையான புகைப்பட ஷோ என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்: Brics Summit: ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?

பிரிட்டன் என்றால் என்ன?

இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளும் சேர்ந்த கூட்டமைப்பு தான் ஐக்கிய ராஜ்ஜியம் அல்லது பிரிட்டன் என்று குறிப்பிடப்படுகிறது. அதிகாரப்பகிர்வின்படி, இங்கிலாந்தில் உள்ள மத்திய நாடாளுமன்றம் நான்கு நாடுகளுக்கும் சேர்த்து பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்ற தேசிய விவகாரங்களைக் கையாள்கிறது. அதே வேளையில், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்கள் உள்ளூர் சட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இப்படியாக இல்லாமல் முழு சுதந்திரத்துடன் செயல்படும் வகையில் பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் கோரிக்கை தற்போது மேலும் வலுவடைந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஐரோப்பா யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Source: Read Full Article