தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த பிறகு அதிமுக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அதிமுக-வில் இணைந்தனர். இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கே சீட்டு:

வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் இந்த இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில், முதல் கட்சியாக திமுக தனது வேட்பாளர்களை அறிவித்தது. ஆளுங்கட்சியான தவெக மதுராந்தகம் தொகுதியை அந்த தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதத்திற்கும், தாராபுரம் தொகுதியை அந்த தொகுதியில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ சத்யபாமாவிற்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவெக-வை நம்பி தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றவர்களும் விஜய்யின் இந்த முடிவால் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மாற்றுக்கட்சியினர் ஆதிக்கம்:

தவெக-வை விஜய் தொடங்கிய பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் பல பிரபலங்களும் தவெக-வில் இணைந்தனர். தற்போது தவெக-வில் அமைச்சர்களாக உள்ள ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள். ராஜ்மோகன் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தவெக-வில் இணைந்தவர்கள். தொடக்க காலம் முதலே விஜய்யுடன் இருந்தவர்களை காட்டிலும் திடீரென வந்திணைந்த இவர்களுக்கு அமைச்சர் பதவி மட்டுமின்றி கட்சியில் முக்கியமான அதிகாரத்தில் அவர்கள் இருப்பது தவெக-வில் தொடக்க காலம் முதல் இருப்பவர்களுக்கு சற்று அதிருப்தியை அப்போதே ஏற்படுத்தியிருந்தது.

அதிருப்தியில் தொண்டர்கள்:

விஜய் ஆட்சியமைத்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், எம்ஆர் விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக-வில் அதிகாரமாக இருந்த பலரும் தவெக-வில் இணைந்தனர். மாற்றுக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைந்தவர்கள் அதிகாரமிக்கவர்களாக திகழ்ந்து வருவது விஜய்யுடன் அவரது ரசிகர் மன்றத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

தற்போது இடைத்தேர்தலில் அதிமுக-வில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் அந்த தொகுதியில் தவெக சார்பில் ஏற்கனவே களமிறங்கிய வேட்பாளர்களும், அவரது ஆதரவாளர்களும் சற்று மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசியல் வியூகம் கருதி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தக்க சமயத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தவெக-வின் முக்கிய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிம்மதி மூச்சுவிடும் முன்னாள் எம்எல்ஏ-க்கள்:

அதேசமயம், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் நிம்மதி மூச்சில் உள்ளனர்.

Source: Read Full Article