TVK: “சிறை சென்ற தியாகி” பிம்பம் உடையும் பதற்றம் ஸ்டாலினை தொற்றிக்கொண்டதா? - தவெக அட்டாக்

TVK: “சிறை சென்ற தியாகி” பிம்பம் உடையும் பதற்றம் ஸ்டாலினை தொற்றிக்கொண்டதா? - தவெக அட்டாக்
News Image

TVK On MK Stalin: மிசா கைது தொடர்பான ஸ்டாலினின் விளக்க வீடியோவை குறிப்பிட்டு, தவெக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

”சிறை சென்ற தியாகி” - தவெக அட்டாக்

மிசா கைது குறித்த முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு தவெக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.

பொய் பிம்பங்கள் தாங்காது - தவெக

உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன. கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி” என தவெக சாடியுள்ளது.

ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ என்ன?

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாலும், மிசா தொடர்பான வழக்குகளில் அவர் கைது செய்யப்படவில்லை என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். 50 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வரும் போலி பிம்பங்கள் உடைத்தெறியப்படும் எனவும் எச்சரித்து இருந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், தந்தை கருணாநிதியே தன்னை காவலர்களிடம் ஒப்படைத்தது எப்படி, சிறையில் அனுபவித்த கொடுமைகள், காவலர்கள் தாக்கியதால் தனது தாடை உடைந்தது தொடர்பாக விளக்கி இருந்தார். மேலும், யார் என்ன சொன்னாலும் வரலாற்றை மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்: TN Railway Project: ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி - அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்

தவெக அரசு மீது குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசுகையில், “முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் வீட்டிற்கு வந்தபோது, பரப்புரையின் போது அதிகமாக விமர்சித்து விட்டேன் என மன்னிப்பு கோரியதை மறந்துவிட்டீர்களா? அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. அப்போதும் யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் என ஆலோசனை கூறினேன். அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷுட்டிங் போல நடத்துகிறீர்கள். தினந்தோறும் திருட்டு, கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு படுகுழியில் கிடக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள். எது நிர்வாகத்திறன் வாய்ந்த அரசு, நிர்வாக திறன் இல்லாத அரசு எது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என ஸ்டாலின் கடுமையாக சாடி இருந்தார். இந்நிலையில் தான், முழு நீள வீடியோவை வெளியிட்டும் மிசா காலத்தில் எதற்காக கைது செய்யப்பட்டீர்கள்? என்பதற்கான ஆவணத்தை மட்டும் வெளியிடாதது ஏன்? என தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks