மத்திய கிழக்கில் மோதல் முடிவுக்கு வரும் என்பதுபோல் தெரியவில்லை. பல மாதங்கள் கடந்த பின்னரும், அமெரிக்க-ஈரான் போர் முடிவுக்கு வராமல் உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரான் போர் ஒரு திருப்புமுனையில் இருப்பதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மீது மற்றொரு பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுப்பதா வேண்டாமா என்பதை இப்போது தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் பரபரப்பு பேட்டி

ஆக்சியோஸ் (Axios) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது: நான் உள்ளே சென்று அவர்களை அழிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா?" என்று ட்ரம்ப் கூறினார்.

ஐ.நா. பொதுச் சபையின் போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு முன்னதாக ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டார். ட்ரம்பின் இந்த முடிவு, போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும். சவுதி எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்கள் நடத்தும் என்ற கவலை காரணமாக, அதிபர் ட்ரம்ப் ஆகஸ்ட் மாதம் முக்கிய ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினார். அதன் பின்னர், அவர் கடற்படை முற்றுகை, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

அமெரிக்க முற்றுகை குறித்து ட்ரம்ப் என்ன கூறினார்.?

இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதி வரை, ராணுவ பலத்தை, போர் போன்ற நிலையில் பராமரிக்குமாறு பென்டகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும், டெஹ்ரான் இன்னும் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறுகிறார். இருப்பினும், தற்போது, போரும் சரி, சமாதானமும் சரி, நீடிக்கக்கூடிய நிலையில் இல்லை என்றும், இடைத்தேர்தலுக்குப் பிறகு பெரிய அளவிலான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிறைவேற்றப்பட்ட கிரஹாம் மசோதா

கிரஹாம் மசோதாவின் காலக்கெடு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததோடு, அதிபர் அதில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். ரஷ்யா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. 'லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைச் சட்டம், 2026' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட இந்த மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article