TN weather Rain Update (04-09-2026): தலைநகர் சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை:

05-09-2026 முதல் 08-09-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

09-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

04-09-2026 முதல் 07-09-2026 வரை: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.

04-09-2026 முதல் 07-09-2026 வரை: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்று மாலை முதலே நகரின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையிலும் லேசான தூறல் விழுந்து வருவதால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயணம் மேற்கொள்வோர் உள்ளிட்டோட்ர் சிரமத்திற்கு ஆளாகினர்.

மீனவர்களுக்கு என தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் பகுதிகள் நிலவும் சூழல் தொடர்பாக இன்றைய தேதிக்கு வானிலை மையம் எந்தவொரு குறிப்பிட்ட எச்சரிக்கையையும் வெளியிடவில்லை.

Source: Read Full Article