TN Railway Project: ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி - அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்

TN Railway Project: ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி -  அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்
News Image

TN Railway Project: அரக்கோணம் மற்றும் ரேணிகுண்டா இடையேயான நான்குவழித்தடத்தை அமைக்கும் திட்டத்தையும் சேர்த்தாம், தமிழ்நாட்டில் மொத்தம் 383 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது.

ரயில்வே திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டில் மூன்று ரயில்வே திட்டங்களை அடுத்த கட்டத்தை நோக்கி மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அரக்கோணம் மற்றும் ரேணிகுண்டா இடையே மூன்றாவது 77 கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்றவாது மற்றும் நான்காவது வழித்தடம் அமைப்பது, ஓசூர் – ஓமலூர் இடையே 147 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல் மற்றும் சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே 159 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல் ஆகியவை அடங்கும். இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 383 கிலோ மீட்டர் நீளத்திற்கான ரயில் வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது.

பட்ஜெட் விவரங்கள் - பணிகள் எப்போது முடிவடையும்?

பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் ப்ளான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளானது 2029-30ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

அரக்கோணம்–ரேணிகுண்டா இடையே  3 மற்றும் 4ஆவது ரயில் வழித்தடங்களை அமைக்கும்  ரூ.1,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

ஓசூர் - ஓமலூர் இடையே 147 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரண்டாவது வழித்தடம் அமைக்க ரூ.1,938 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே 159 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரண்டாவது வழித்தடம் அமைக்க ரூ.1600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம்–ரேணிகுண்டா திட்ட பலன்கள்:

இந்த பகுதிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் நான்காவது வழித்தடத்தை அமைப்பதன் மூலம், அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மும்பை - சென்னை பிரதான வழித்தடத்தில் போக்குவரத்து தடைகள் நீங்கும்

பக்தர்கள் அதிகம் கூடும் காலங்களில் திருப்பதி மற்றும் ராயலசீமா பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் சேவைகளின் எண்ணிக்கையும், குறிப்பிட்ட பயண நேரத்தையும் மேம்படுத்த முடியும்

வழித்தட மேம்படுத்தலால் வடக்குத் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் வழியாகச் செல்லும் பிரம்மாண்டமான வாகனங்கள், நிலக்கரி மற்றும் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்கும்

முக்கிய நிறுத்தங்கள்: அரக்கோணம் சந்திப்பு, திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூர் மற்றும் ரேணிகுண்டா சந்திப்பு ஆகியவை இந்த வழித்தடத்தின் முக்கிய நிறுத்தங்களாகும்

ஒட்டுமொத்தமாக இந்த வழித்தடத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சேர்த்து 14 ரயில் நிறுத்தங்கள் உள்ளன

இதையும் படியுங்கள்:MK Stalin: வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

ஓசூர் - ஓமலூர் திட்ட பலன்கள்:

ஓசூர் - ஓமலூர் இடையே இரட்டை வழித்தடத்தை அமைப்பதன் மூலம், கடக்கும் தாமதங்களைக் குறைப்பது, கனரக சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து நெரிசல்களை மட்டுப்படுத்துவது

ஓசூர் ஒரு முக்கிய உற்பத்தி மற்றும் வாகன மையமாக விளங்குகிறது. அதே சமயம் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் விவசாயம், ஜவுளி மற்றும் கனரகத் தொழில்களுக்கு இன்றியமையாதவையாக உள்ளன. அந்த வகையில் இரண்டாவது வழித்தடமானது

ஓசூர் தொழிற்பேட்டையில் தயாரிக்கப்படும் ஆட்டோமொபைல்கள் மற்றும் கன்டெய்னர்கள், சிமெண்ட், இரும்பு, எஃகு, நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போன்ற மூலப்பொருட்கள்

தர்மபுரி மற்றும் பாலக்கோடு பகுதிகளிலிருந்து பெறப்படும் விவசாயப் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு இடையே எளிதில் பயணிக்க வழிவகை செய்யும்

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையே ஒரு முக்கிய பாலமாக இந்த வழித்தடம் செயல்படுகிறது. ஒகேனக்கல் அருவி , மேட்டூர் அணை மற்றும் சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் போன்ற முக்கிய பிராந்திய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தடையற்ற, சிரமமற்ற ரயில் பயண அணுகலையும் வழங்குகிறது

முக்கிய சந்திப்புகள்: தர்மபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை மற்றும் கெலமங்கலம் ஆகியவை அடங்கும்

சேலம் – கரூர் – திண்டுக்கல் திட்ட பலன்கள்

பரபரப்பான இந்த ஒற்றை வழிப் பாதையில் உள்ள நெரிசலை இரண்டாவது வழித்தடம் குறைப்பதால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இரண்டும் சீராக இயங்க முடியும்

ரயில்கள் கடக்கும் இடங்களில் காத்திருக்கும் நேரம் குறைவதால், ஒட்டுமொத்த பயண நேரமும் குறையும்

மேட்டூர் அனல் மின் நிலையம் மற்றும் எஃகு, சிமெண்ட், ஜவுளி, விவசாயம் போன்ற முக்கியத் துறைகளுக்கான இன்றியமையாத தொழில்துறை நகர்வுகளுக்கு இந்த வழித்தடம் ஆதரவளிக்கிறது

மேம்படுத்தப்பட்ட ரயில் போக்குவரத்துத் திறன், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் மையங்களை இணைத்து, பிராந்திய வர்த்தகத்தையும் உள்ளூர் வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கிறது.

தமிழ்நாட்டிற்கான ஒட்டுமொத்த பலன்கள்:

சுமார் 5 ஆயிரத்து 474 கோடி ரூபாய் செலவில் 384 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்படுத்தப்படும் வழித்தடங்கள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஓசூர் கோட்டை, மேட்டூர் அணை, கொடைக்கானல் மலைப்பகுதி, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், யாதகிரிகட்டா கோயில், போங்கீர் கோட்டை, சுரேந்திரபுரி, ஸ்வர்ணகிரி கோயில், திருப்பதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோட்டிலிங்கேஸ்வரர் கோயில், சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி, கோலார் தங்கச் சுரங்கங்கள், உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்தும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks