Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?

Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
News Image

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இந்தியாவில் ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் களத்தில் இருக்கும் வரை மட்டுமே ரசிகர்கள் போட்டியையே பார்ப்பார்கள். அந்தளவு இந்திய அணியை தனி ஆளாக தனது தோளில் தூக்கி சுமந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் ஒருநாள் போட்டியில் முதல் சதம் விளாசிய நாள்:

அப்பேற்பட்ட சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய நாள் இன்று ஆகும். 21 வயதே ஆன சச்சின் டெண்டுல்கர் கொழும்புவில் நடந்த அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் மனோஜ் பிரபாகருடன் ஆட்டத்தை தொடங்கினார்.

தொடக்க வீரர் மனோஜ் பிரபாகர் 20 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த நவ்ஜோத் சிந்து 24 ரன்கள் எடுத்த அவுட்டாக மற்றொரு வீரர் முகமது அசாரூதின் ஒத்துழைப்பு அளித்தார். மற்ற வீரர்கள் நிதானமாக ஆட சச்சின் டெண்டுல்கர் பொறுப்புடன் ஆடினார்.  மெக்ராத், கிரெக் மெக்டெர்மாட், ஷேன் வார்னே, டிம் மே ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சை சச்சின் எதிர்கொண்டார்.

முதல் சதம்:

அரைசதத்தை கடந்தும் அசத்திய சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டி சதத்தை விளாசினார். மிக அபாரமாக ஆடிய டெண்டுல்கர் 130 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 110 ரன்கள் எடுத்து அவுட்டானார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அன்று தொடங்கியது சச்சின் சத வேட்டை. அந்த போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் எடுத்தது.

பவர்ப்ளே இல்லாத காலகட்டமான 1994ம் ஆண்டு 247 ரன்கள் இலக்கு என்பது மிகவும் சவாலான இலக்கே ஆகும். மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் டெய்லர், மார்க் வாக், டேவிட் பூன், ஸ்டீவ் வாக் என வலுவான பேட்டிங் பட்டாளம் கொண்ட  ஆஸ்திரேலியாவை மனோஜ் பிரபாகர், கபில்தேவ், வெங்கடபதி ராஜு, ராஜேஷ் செளகான், கும்ப்ளே ஆகியோர் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர்.

அபார வெற்றி:

மனோஜ் பிரபாகர் 3 விக்கெட்டுகளையும், ராஜேஷ் செளகான் 2 விக்கெட்டையும் கைப்பற்ற ஆஸ்திரேலியா 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி இந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு சச்சின் 3 சதங்களை விளாசி அதன்பின்பு சச்சின் படைத்த சாதனைகள் உலகம் அறியும்.

1989ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 1994ம் ஆண்டுதான் முதன்முறையாக சதம் விளாசினார். ஆனால், தான் ஓய்வு பெறுவதற்குள் ஒருநாள் போட்டியில் மட்டும் 49 சதங்களை விளாசினார். ஒருநாள் போட்டியில் உலக கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் சச்சின் டெண்டுல்கரே ஆவார். டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களை விளாசியுள்ளார்.

நெருங்க முடியாத சாதனைகள்:

சச்சின் ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்கள் எடுத்து யாருமே அருகில் வர முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் சாதனையை தன்வசம் வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை 1994ம் ஆண்டே விளாசிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks