பெருமாள் கோயில் சுற்றுலா திட்டம்

தமிழக சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல்வேறு ஆன்மிக இடங்களுக்கு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையலில், புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாள் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புரட்டாசி மாதத்தையொட்டி, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமாள் திருக்கோயில்களை ஒரே நாளில் தரிசித்து பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் சிறப்பு “பெருமாள் கோயில்கள் சுற்றுலா ஒரு நாள் சுற்றுலா" திட்டம் 18-09-2026 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைணவ திருக்கோவில் சுற்றுலா சென்னை-1

தலைமை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை அலுவலகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம். அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட 6 பெருமாள் திருக்கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுலா கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000/-ஆகும்.

வைணவ திருக்கோவில் சுற்றுலா - சென்னை-2:

காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமழிசை ஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் வைத்திய
வீரராகவ பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மற்றும் பூந்தமல்லி வரதராஜபெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட 7 பெருமாள் திருக்கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுலா கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000/- ஆகும்.

வைணவ திருக்கோவில் சுற்றுலா - மதுரை:

மதுரை ஓட்டல் தமிழ்நாடு அழகர் கோவில் சாலையிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஒத்தக்கடை, ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில், வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில், மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுலா கட்டணம் ஒருவருக்கு ரூ.1,400/- ஆகும்.

வைணவ திருக்கோவில் சுற்றுலா - திருச்சி:

ஓட்டல் தமிழ்நாடு, திருச்சியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, உறையூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், உத்தமர் கோவில் புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுலா கட்டணம் ஒருவருக்கு ரூ.1,100/- ஆகும்.

வைணவ திருக்கோவில் சுற்றுலா - தஞ்சாவூர்:

ஓட்டல் தமிழ்நாடு, தஞ்சாவூரிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருக்கண்டியூர் அருள்மிகு சாபவிமோசன பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலசுவாமி திருக்கோயில், வடுவூர் கோதண்டராமர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுலா கட்டணம் ஒருவருக்கு ரூ.1,400/- ஆகும்.

சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மற்றும் முன்பதிவு:

மேற்கண்ட சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு www.ttdconline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 1800 425 31111, 75500 63121, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article