PAK vs SL: இறுதிவரை த்ரில்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை.! தனி ஆளாக போராடிய பாகிஸ்தான் கேப்டன்!

PAK vs SL: இறுதிவரை த்ரில்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை.! தனி ஆளாக போராடிய பாகிஸ்தான் கேப்டன்!
News Image

மகளிர் கிரிக்கெட்டின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் மோதிய இந்த தொடரில் இந்திய மகளிர் அணி அரையிறுதியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்றது.

பாகிஸ்தான் - இலங்கை:

இந்த நிலையில், இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்? என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதியது.

கேப்டன் சனா போராட்டம்:

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணிக்காக முனிபா அலி 2 ரன்னில் அவுட்டாக, குல் பெரோஷா ஆடினார். ஆனால், ஜுல்பிகுர் அதிரடியாக ஆடினார். அவர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த ஆயிஷா, சதாஃப் ஷமாஸ் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள். அப்போது கேப்டன் ஃபாத்திமா சனா களமிறங்கினார்.

மறுமுனையில் பெரோஷா நிதானமாகவே ஆட ஃபாத்திமா அதிரடியாக ஆடினார். நிதானம் காட்டிய பெரோஷா 32 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஃபாத்திமா சனா கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியதால் பாகிஸ்தான் சற்று கெளரவமான இலக்கை நிர்ணயித்தது.

தடுமாறிய இலங்கை:

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் கேப்டன் சனா 36 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். இலங்கை கேப்டன் அத்தப்பட்டு, ப்ரபோதா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

131 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்று களமிறங்கிய இலங்கைக்கு பாகிஸ்தான் கேப்டன் சனா சவால் அளித்தார். அவரது பந்துவீச்சில் இலங்கை கேப்டன் அட்டப்பட்டு 5 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த சஞ்சனா டக் அவுட்டானார். மறுமுனையில் தொடக்க வீராங்கனை இமாஷா நிதானமாக ஆட ஹாசினி 3 ரன்னில் அவுட்டானார்.

31 ரன்களில் 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. அடுத்து வந்த ஹர்ஷிதா பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் நிதானமாக ஆடி அணியை மீட்க உதவிய இமாஷா 24 ரன்னில் அவுட்டானார். 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்த இலங்கைக்காக ஹர்ஷிதா - கவிஷா ஜோடி சேர்ந்தனர்.

காப்பாற்றிய ஃபினிஷர்ஸ்:

வெற்றி எளிது என்று கருதிய பாகிஸ்தானை இவர்கள் பந்தாடினர். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி ஓரிரு ரன்களாக எடுத்தனர். இவர்களின் ஆட்டத்தால் இலங்கை 100 ரன்களை எட்டியது. அப்போது ஹர்ஷிதாவை கேப்டன் ஃபாத்திமா அவுட்டாக்கினார்.  ஹர்ஷிதா 31 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் கவிஷாவையும் கேப்டன் ஃபாத்திமா அவுட்டாக்கினார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால், பாகிஸ்தான் கை ஓங்கியது. ஆனால், நிலக்ஷிகா -  கெளஷனி ஜோடி இலங்கையை காப்பாற்றியது. இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ஆட்டத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றினார்.

இறுதிப்போட்டியில் இலங்கை:

17வது ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இலங்கை 19வது ஓவரின் முடிவில் வெற்றி பெற்றுவிட்டது. நிலக்ஷிகா 10 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 18 ரன்களும், கெளஷனி 4 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்த இலங்கை இறுதிப்போட்டிக்குச் சென்றது. பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா 4 விக்கெட் வீழ்த்தினார்.  சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை நாளை மோதுகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks