NHAI ATMS: மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் கைவிடப்படும் வாகனங்கள்:

கேராளாவிற்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் அடங்கிய குழுவினரின் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது மோதியதில் அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன் நீட்சியாக நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கைவிடப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும் எனபது தொடர்பான கோரிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலுத்து வருகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44 பகுதியானது தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் உடனடி செயலாக்க திட்டங்கள் எப்படி மோசமான விபத்துகளை தவிர்க்க உதவுகிறது என்பதை உணர்த்துகிறது.

கணிசமாக குறைக்கப்பட்ட விபத்துகள்:

கன்னியாகுமரி டூ மதுரை இடையேயான 243 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு 26 ஆக இருந்த நிலையில், 2025ம் ஆண்டில் அது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தங்களது மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பே இதற்கு காரணம் எனவும் விளக்கமளித்துள்ளது. 2022ம் ஆண்டில் நடந்த அந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் அதிக உயிரிழப்பு சந்தித்த வழித்தடங்களில் கன்னியாகுமரி - மதுரை வழித்தடமும் ஒன்றாகும். கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்குவரத்து வழித்தடத்தில், சட்டவிரோதமாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் மோதியதில் சுமார் 520 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் சுமார் 200 பேர் உயிரிழந்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தைய நிகழ்வுகளானது குறிப்பிட்டு வழித்தடங்களில் ATMS எனப்படும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் மூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ATMS வசதி எப்படி செயல்படுகிறது?

ATMS அமைப்பில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன. அதன்படி, இதில் வீடியோ மூலம் நிகழ்வுகளை அடையாளம் காண்பது மற்றும் அமல்படுத்தும் நடைமுறை, கண்காணிக்கும் அறைகள், களத்தில் இறங்கி பணிகளை மேற்கொள்வது, கடைசியாக ஆவணப்படுத்து குழு ஆகியவை அடங்கும். அந்த வகையில் கன்னியாகுமரி - மதுரை வழித்தடத்தை தொடர்ந்து கண்காணிக்க சாலையின் நடுவில் உள்ள மீடியன்கள் மற்றும் விபத்து அதிகம் நேர வாய்ப்புள்ள பகுதிகளில் 348 பேன் - டில்ட், ஜும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கயத்தாறு மற்றும் சாத்தூர் பகுதிகளில் முழு நேர கண்காணிப்பாளர்களை கொண்டு கண்காணிப்பு மையங்கள் நிறுவப்பட்டன. வாகனம் 20 நொடிகளுக்கும் மேலாக நகராமல் தொடர்ந்து ஒரே இடத்தில் நின்றால், கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அலெர்ட் கிடைக்கும். அங்கிருந்து களத்தில் செயல்படும் குழுவிற்கு தகவல் அனுப்பப்படும்.

ATMS என்னென்ன செய்யும்?

மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பானது வாகனங்கள் நகராமல் ஒரே இடத்தில் நிற்பது, வாகனங்கள் தவறான வழிகளில் பயணிப்பது, நடைபயணிகள் வாகனங்களுக்கான பிரிவில் இருப்பது மற்றும் வாகன போக்குவரத்திற்கு குறுக்கீடாக இருப்பது போன்றவற்றை அடையாளம் காணும். சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் அடைபட்டு இருப்பது போன்ற பல்வேறு சூழல்கள் தொடர்பாக நிகழ்நேரத்தில் பல்வேறு விதமான அலெர்ட்களை வழங்கக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?

நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு:

ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் இடையில் இரண்டு வழிகளிலும் ரோந்து மேற்கொள்ள வாகனங்களை களமிறக்கியதோடு, ரிகவரி குழுக்களும் நியமிக்கப்பட்டன. இவை சாலையோரங்களில் செயலிழந்து அல்லது நகராமல் பார்க் செய்துள்ள வாகனங்களை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் ஈடுபடும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூடுதல் உதவி தேவைப்படுத்தும் காவல்துறை, 108 ஆம்புலன்ஸ் போன்ற மாநில ஏஜென்சிகளின் உதவிகளையும் நாடுகிறதாம். பெரும்பாலான இடங்களில் தற்போதுள்ள அமைப்பானது 2016ம் ஆண்டு அடிப்படையிலான நெடுஞ்சாலை போக்குவரத்து மேலாண்மை அமைப்பாகும். அதனை 2023ம் ஆண்டு தரத்திற்கு மேம்படுத்த NHAI தீவிரம் காட்டி வருகிறது.

1,188KM நீள சாலைகளுக்கு விரிவாக்கம்

தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட 21 திட்டப் பகுதிகளில் ATMS தொழில்நுட்பம் நல்ல பலன்களை அளித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள NHAI-க்குச் சொந்தமான ஆறாயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகளில் 1,188 கி.மீ நீளமுள்ள சாலைப் பகுதிகளில் ATMS நிறுவப்பட்டுள்ளது. இவை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஆகியவை மிகப்பெரிய அளவில் குறைக்கப்படு

Source: Read Full Article