மேல்மா கிராமத்தில் சிப்காட்

தமிழகத்தின் தொழில் வளர்சிக்காக பல திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்கார் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் நிலம் எடுப்பு தொடர்பான தவெக அரசு அரசாரணை வெளியிட்டது. இதனையடுத்து தவெக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் அறிவித்தனர்.

நிலைப்பாட்டை மாற்றிய தவெக அரசு

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில், த.வெ.க. அரசு செய்யாறு தொழிற் பூங்கா திட்டத்துக்காக மேல்மா கிராமத்தில் 22 எக்டேர் புன்செய் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. த.வெ.க. அரசு மேல்மாவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லியிருந்தது. 2025 ஜூலை மாதம் நடந்த த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டதை கண்டித்திருந்தது த.வெ.க. சில மாதம் முன்பு மேல்மாவில் சிப்காட் அமைக்க விவசாய நிலம் தேவையா என உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தார்.
இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா த.வெ.க. அரசு. வேளாண் நிலங்களின் பயன்பாட்டை மாற்றம் செய்யும் விதிகளை நீர்த்துப் போகச் செய்து திருத்தங்களைச் செய்தது முதல் தொடர்ந்து கடலூர் சிப்காட், உடன்குடி அனல் மின் நிலையம், மேல்மா சிப்காட் என நில எடுப்பு நோட்டீஸ்களை அரசு வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது என தெரிவித்திருந்தது.

நிலம் கையெடுப்பு- அறிவிப்பு திரும்ப பெற்ற அரசு

இந்த நிலையில், இது தொடர்பாக சிப்காட் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு அரசிதழ் எண் 369 நாள் 01.09.2026 அன்று சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்படி அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை எண். VI(1) / 443 * (d - 6) * 2026 திரும்பப் பெறப்படுகிறது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article