மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வரும் செப்டம்பர் 17ம் தேதி மதுரையை ஆளும் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயில்களில் திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து வண்ண மயமாக ஜொலிக்கிறது. இந்த நிலையில் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் காண பக்தர்கள் மதுரைக்கு பயணிக்க திட்டமிட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

வண்டி எண் 06153 /06154 என்ற ரயிலானது சென்னை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து செப்டம்பர் 17ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல வண்டி 06157/06158 என்ற எண் கொண்ட ரயிலானது தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் செப்டம்பர் 16 அன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக செப்டம்பர் 17ம் தேதி இரவு 7 மணிக்கு மதுரையில் புறப்பட்டு அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.

மேலும் மெமு எக்ஸ்பிரஸ் எனப்படும் முழுக்க முழுக்க முன்பதிவில்லா பெட்டிகளைக் கொண்ட ரயில் சென்னை கடற்கரை - மானாமதுரை இடையே இயக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ரயில் செப்டம்பர் 16ம் தேதி காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 12 மணிக்கு மானாமதுரையில் செப்டம்பர் 17ம் தேதி புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். இதில் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். இந்த ரயிலானது சென்னை எழும்பூர், தாம்பர, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இட்யக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதனைத் தவிர மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன், நெல்லை, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, கன்னியாகுமரி, மைசூர், பெங்களூரு, கோவை, திருச்சி இண்டர்சிட்டி உள்ளிட்ட பல ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article