சென்னை திருவொற்றியூரில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புகாரளித்த மறுநாளே இளைஞர் கொலை

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரதீப் ராஜ் என்பவர் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஒருநாள் முன்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டி மர்ம நபர்கள் போன் செய்வதாக புகார் தெரிவித்திருந்தார். தெரிந்தவர் ஒருவருக்கு தனது தாயார் ரூ.18 லட்சம் பணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டார். இதன் காரணமாக பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணத்திற்கு 40 பைசா வட்டி போட்டுகிறார்கள்.

தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில்… https://t.co/cQFppHYJ3B

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 10, 2026

இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகம் வரை சென்று புகாரளித்தேன். ஆனால் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். மேலும் இங்குள்ள காவல் ஆய்வாளர் என்ன அழைத்து கொலை செய்து விடுவேன், கை, கால்களை உடைத்து விடுவேன், துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என மிரட்டுகிறார் என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு நாளில் கொலை நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர் மீது புகார் சொன்ன மறுநாளே கொலை நடந்துள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இந்த கொலை சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. முதலமைச்சர் ஜோசப் விஜய் , தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article