தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் தொடங்கி 28 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டசபையின் கடைசி நாளான இன்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தன்னுடைய கடந்த கால அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

அன்று அனுமதி மறுப்பு:

சட்டசபையில் அவர் பேசும்போது, லயோலா கல்லூரி படிக்கும்போது இங்கே ஒரு அதிகாரியைச் சந்திக்க வந்தேன். அப்போது, இங்கே இருக்கும் மாடத்தை ஒரு நிமிடம் எட்டிப்பார்க்கிறேன் என்றேன். சபை நடக்கும்போது முடியாது என்றனர். எட்டிப் பார்த்துவிட்டு மட்டும் சென்றுவிடுகிறேன். என்னுடனே நில்லுங்கள் என்றேன்.

அனுமதி இல்லாமல் அனுப்ப முடியாது. அமைச்சர் அனுமதி வேண்டும் என்றார். எனக்கு எந்த அமைச்சரும் தெரியாது என்றேன். திரும்ப அவர் முடியாது என்றார். அப்படியா? ஒருநாள் நான் இங்கே வந்து உட்காருகிறேன் பாருங்கள். நீ பார்ப்பாய் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். இது எப்படி நடந்தது? என்று தெரியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

JCD பிரபாகர் - நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது சட்ட சபை பார்க்க வந்த ஒரு sec பார்த்து கொள்கிறேன் கேட்டன் அனுமதிக்கவில்லை

அப்போ சொன்ன ஒரு நாள் நான் உள்ள வருவன் என்று 🔥🔥🔥 pic.twitter.com/WpdfJwXQkD

— rossy (@rossy1478178) September 8, 2026

ஜேசிடி அரசியல் பயணம் எப்படி?

தன்னுடைய அரசியல் பயணத்தை அதிமுக-வில் தொடங்கிய ஜேசிடி பிரபாகர் 1980ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றார். பின்னர், அவர் 1984, 1989 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர், அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர் அவருடன் இணைந்து கட்சியில் இருந்து வெளியேறினார். அவரது ஆதரவாளராக தீவிரமாக செயல்பட்டு வந்த ஜேசிடி பிரபாகர் பின்னர் தவெக-வில் இணைந்தார். அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

பாராட்டு:

எம்ஜிஆர் காலம் முதல் அரசியல் அனுபவம் கொண்ட ஜேசிடி பிரபாகருக்கு முதலமைச்சர் விஜய் சபாநாயகர் வாய்ப்பை வழங்கினார். எதிர்க்கட்சியினரும் பாராட்டும் வகையில் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Source: Read Full Article