தமிழ்நாட்டின் சபாநாயகராக பொறுப்பு வகிப்பவர் ஜேசிடி பிரபாகர். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இவர் தமிழ்நாட்டை வழிநடத்திய விதம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், அரசியல் கட்சிகள் மத்தியில் பாராட்டையும் பெற்றது.

அனைத்து ஓட்டும் விஜய்க்கே:

இவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, சாதாரணமாக வேட்பாளர் யாரென்று கேட்பார்கள். அப்போது, நான் ஜேசிடி பிரபாகர். லயோலா கல்லூரியில் படித்துள்ளேன் என்று கூறுவேன் என்று ஆரம்பிப்போம். அப்போது ஒருவர் 6 ஓட்டு இருக்கிறது. 6 ஓட்டும் விசிலுக்கே என்று கூறினார். நீ வந்தாலும் போடுவோம். வரவில்லை என்றாலும் போடுவோம். நாங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டோம். அனைத்து ஓட்டும் விஜய்க்கே என்றார்.

முதல் வேலை:

செல்லும் இடமெல்லாம் நான் பார்த்துக்கொண்டே வந்தேன். எது திமுக-வின் கோட்டை என்று கேட்டேன். இந்த இடம் திமுக கவுன்சிலர் இருக்கும் இடம்? இந்த இடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது திமுக கோட்டை என்று கூறுவார்கள். என்னுடைய உதவியாளரிடம் கூறிவிடுவேன். எது? எது? திமுக கோட்டை என்று கூறுகிறார்களோ அதை உடைப்பதுதான் என்னுடைய முதல் வேலை.

இந்த தேர்தலில் ஒன்றை தான் நான் பார்த்தேன்,

எந்த ஜாதி என்று கேட்கவில்லை, எந்த பிரிவு என்று கேட்கவில்லை இவர் யார் என்றும் கேட்கவில்லை,
எல்லாம் விஜய் விஜய்

- சபாநாயகர் @JCDPrabhakar 🔥🔥🔥 pic.twitter.com/UecvIT9TOJ

— TVK Sqυα∂💥 (@TVKVijay24x7) September 11, 2026

தேதி அறிவித்தவுடன் முதலில் எல்லையை காட்டுங்கள் என்றேன். திமுக கோட்டை, இது வட்டச் செயலாளர் குடியிருக்கிறார் என்று அனைத்தையும் குறிப்பு எடுத்துக் கொண்டனர். இந்த தேர்தலுக்கான தயாரானது எப்படியென்றால் இறைவன் கொடுத்த அனுபவத்தால் அனைத்தையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.

எல்லாமே விஜய்:

இந்த தேர்தல் களத்தில் ஒன்றுதான் பார்த்தேன். எந்த சாதி என்று பார்க்கவில்லை. எந்த மதம் என்று கேட்கவில்லை. எந்த பிரிவு என்று கேட்கவில்லை. யாரென்று கேட்கவில்லை. எல்லாம் விஜய், விஜய், விஜய். அதைத்தாண்டி எதுவுமே கிடையாது. களத்தில் தொண்டர்களுடன் ஐக்கியப்படுத்திய வட்டச் செயலாளர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

73 வயதான ஜேசிடி பிரபாகர் எம்ஜிஆர் காலத்திலே எம்எல்ஏ-வாக பொறுப்பு வகித்தவர். நிரம்ப அரசியல் அனுபவம் கொண்ட அவர் அதிமுக-வில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தவெக-வில் இணைந்தார்.கடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அனுபவமிகுந்தவர் என்பதால் அவருக்கு சபாநாயகர் பொறுப்பை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

Source: Read Full Article