JCD Prabhakar: "தாயுள்ளம் கொண்டவர்.." சட்டசபையில் ஜேசிடி பிரபாகருக்கு அதிமுக, பாமக எம்எல்ஏ-க்கள் புகழாரம்!

JCD Prabhakar: "தாயுள்ளம் கொண்டவர்.." சட்டசபையில் ஜேசிடி பிரபாகருக்கு அதிமுக, பாமக எம்எல்ஏ-க்கள் புகழாரம்!
News Image

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 28 நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பற்றி ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் மிகவும் புகழ்ந்து பேசினர்.

ஜேசிடி பிரபாகர்:

இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பலராலும் கவனிக்கப்பட்ட ஒரு நபர் அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர். இன்று இந்த கூட்டத்தொடரின் இறுதிநாள் என்பதால் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றி ஒவ்வொரு எம்எல்ஏ-க்களும் பேசினர்.

நாற்காலிக்கே அழகு:

அப்போது, அவையை வழிநடத்திய எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் பற்றி அமைச்சர் ஆனந்த் பேசியதாவது, இந்த சபாநாயகர் இருக்கைக்கே ஒரு தனி அழகு என்றால் நமது சபாநாயகர். பளபள என்று இருப்பார் எப்போதும் என்றார்.

கண் அசைத்தாலே போதும்:

பாமக சட்டமன்ற தலைவர் செளமியா அன்புமணி பேசும்போது, நீங்க பெல் அடிச்சா நான் பயப்படுவேன் பாருங்க. நானே சொல்லிடுவேன். எனக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவாங்க பெல் அடித்தால் கூட பரவாயில்லை. கூடுதலாக 5 நிமிடம் பேச வேண்டும் என்று சொல்வார்கள். அவர் பெல் கூட அடிக்க வேண்டும். சபாநாயகர் கண் மட்டும் அசைத்தால் போதும். நான் உடனே இருக்கும் விஷயங்களை கடகடவென முடித்துவிடுவேன்.

அவருக்கு கட்டுப்பட்டுதான் நாம் இந்த சபையில் இருக்கிறோம். அவர் நமது உச்சநீதிமன்ற நீதிபதி போலதான் நமக்கு. அவர் கோபம் வந்தால் ஆங்கிலத்தில் எல்லாம் பேசிவிடுவார். தமிழ் அவ்வளவு நேரம் அழகாக திருக்குறள் எல்லாம் சொல்லிக்கொண்டு வருவார். கோபம் வந்தால் ஆங்கிலம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இறைவன் வேறு நினைத்தார்:

பின்னர், பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏ-வுமான சிவி சண்முகம் பேசும்போது, எம்ஜிஆரின் இந்த இயக்கத்தில்தான் கடைசி வரை இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், இறைவன் வேறு ஒன்று நினைத்துவிட்டார். இந்த அவையை அவர்தான் நடத்த வேண்டும் என்றார். இறைவன் இதை முடிவு பண்ணிவிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் நான் இரண்டு, 3 முறைதான் சட்டமன்றத்தில் பேசியிருப்பேன். ஆனால், இன்று இந்த 20 நாளில் நான் எத்தனை முறை பேசினேன் என்று தெரியவில்லை. தினந்தோறும் நான் கையை உயர்த்தும்போது எல்லாம் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளீர்கள். என் மாவட்ட பிரச்சினை. எனது தொகுதி பிரச்சினை. எல்லா பிரச்சினையும் பேசிவிட்டேன். இனி புதியதாக ஏதாவது பிரச்சினை வந்தால்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாயுள்ளம் கொண்டவர்:

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அண்ணன்( ஜேசிடி பிரபாகர்) வரும்போது சிரித்துக்கொண்டே வந்துவிடுவார். அவருடைய உதவியாளர் இரண்டு கையிலும் இரண்டு பை கொண்டு வருவார். நிறைய வகை, வகையான புது வகையான அப்போது சந்தைக்கு வந்த பிஸ்கட்டுகள் கொண்டு வருவார். அளவில்லாமல் கொடுப்பார். தாயுள்ளம் கொண்டவர். பசியோடு இருக்கக்கூடாது என்று கருதுபவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks