IUML: தவெக குதிரைப் பேரம் நடத்தியதா?.. வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்.. எதிர்க்கட்சிகளுக்கு தரமான பதிலடி!

IUML: தவெக குதிரைப் பேரம் நடத்தியதா?.. வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்.. எதிர்க்கட்சிகளுக்கு தரமான பதிலடி!
News Image

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நடந்த விஷயங்களை எல்லாம் சொன்னால் பிரச்சனை பெரிதாகும் என அவதூறு பரப்புபவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை ப் பிடித்தாலும் பெரும்பான்மை இல்லாமல் தவித்ததால் திமுக கூட்டணியில் இருந்த 5 கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்தது. அதில் 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒன்று. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதற்கு ஏற்ப முதலமைச்சர் விஜய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த எம்எல்ஏவான ஷாஜகானுக்கு அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை வழங்கி சிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை குறிவைத்து தொடர்ச்சியாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

திரித்து வெளியிடப்பட்ட எம்எல்ஏ பேச்சு

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாணியம்பாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ எஸ்.எஸ்.பி சையது பாரூக் பாஷா, “2026 சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணியில் இருந்த நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை அடிப்படையில் ஆதரவு அளித்தோம். பாஜக கூட்டணியில் இருந்த அதிமுகவை ஆட்சியில் அமர வைத்து ஆதரவு கொடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டதால் அதில் உடன்பாடு இல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டோம்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவிய போது சிலர் தன்னையும் அமைச்சர் ஷாஜகானையும் கோடிக்கணக்கான பணம் மற்றும் அமைச்சர் பதவி என்ற ஆஃபருடன் அனுகியதாகவும் குற்றம் சாட்டினார். இது தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரம் நடத்தியதற்கான ஆதாரம் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

நடந்ததை சொன்னால் நன்றாக இருக்காது

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், “கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். வாணியம்பாடி எம்எல்ஏ பேசியது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் அவர் எந்த கட்சியையும் குறிப்பிட்டு குதிரை பேரம் நடந்ததாக தெரிவிக்கவில்லை.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இரு எம்எல்ஏக்கள் ஆளும் அரசுக்கு துணையாக நின்று சமுதாயத்தில் பிரச்சனைகளையும் சில விஷயங்களை சிறப்பாக செய்து வருகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு நடந்த விஷயங்களை அலசி ஆராய்ந்து பேசினால் மேலும் பிரச்சினைகள் பெரிதாகும். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் என்ன நல்ல விஷயம் இருக்கிறது அதை பாராட்ட வேண்டும். குறைகள் இருந்தால் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு. தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks