இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று துலீப் ட்ராபி. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகி்றனர்.

அசத்தலாக ஆடிய கிழக்கு மண்டலம்:

இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களும் எடுத்து அவுட்டாக, ஷிகர் மோகன் 85 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் இஷன் கிஷன் மொத்த ஆட்டத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்தார்.

மறுமுனையில் குமார் குஷக்ராவை வைத்துக்கொண்டு இந்த டெஸ்ட் போட்டியில் ஒருநாள் போட்டி போல ஆடினார். முகமது சிராஜ் போன்ற அனுபவ பந்துவீச்சாளர் பந்துவீசியும், நிதிஷ், திரிபுரா விஜய், சாமா மிலிந்த், ஸ்ரேயாஸ் கோபால் என யார் வீசினாலும் இஷான் கிஷன் அபாரமாக ஆடினார்.

கிஷன் இரட்டை சதம்:

An innings of pure class 👌

Watch 🎥 snippets of Ishan Kishan's fantastic double century so far 💯💯

Scorecard ▶️ https://t.co/KQf5Km69nk#DuleepTrophy | #SZvEZ | @ishankishan51 pic.twitter.com/jOndIaA5Uo

— BCCI Domestic (@BCCIdomestic) September 7, 2026

தொடக்கத்தில் ஷிகர் மோகனுடன் சேர்ந்து ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப்பை ஆடிய இஷன் கிஷன், பின்னர் குமார் குஷக்ராவுடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை ஆடினார். குமார் குஷக்ரா அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் சதம் விளாசி 101 ரன்களில் அவுட்டானாலும் இஷன் கிஷன் தொடர்ந்து அசத்தலாக ஆடினார்.

அபாரமாக ஆடிய இஷன் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தற்போது வரை 154 ஓவர்களில் கிழக்கு மண்டலம் 685 ரன்கள் விளாசி ஆடி வருகிறது. இஷன் கிஷன் 303 பந்துகளில் 251 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். 28 வயதான இஷான் கடந்த டி20 உலகக்கோப்பை முதல் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார்.

முதல் வீரர்:

துலீப் டிராபி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல வீரர் ஒருவர் இரட்டை சதம் விளாசுவது இதுவே முதன்முறை ஆகும். மேலும், அருண் லால் மற்றும் சபா கரீம் ஆகியோருக்கு பிறகு கிழக்கு மண்டல அணிக்காக இரட்டை சதம் விளாசிய வீரர்களுடன் இணைந்து சாதனை படைத்தார்.

கிழக்கு மண்டல அணி வலுவாக உள்ள நிலையில், தெற்கு மண்டல அணியில் நாராயண் ஜெகதீஷன், தேவ்தத் படிக்கல், திலக் வர்மா, ஸ்மாரன் ரவிச்சந்திரன் முக்கிய பேட்ஸ்மேன்களாக உள்ளனர். கிழக்கு மண்டல அணியில் முகேஷ் குமார், முகமது ஷமி என வலுவான பந்துவீச்சு படை உள்ளது. அதை எப்படி தெற்கு மண்டலம் சமாளிக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியை ரசிகர்கள் காண குவிந்து வருகின்றனர்.

Source: Read Full Article