243 பேருடன் கடலில் சென்றுக் கொண்டிருந்த கப்பல் ஒன்று காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக இந்தோனேசியா தீவு திகழ்கிறது. 17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனியாவில் முக்கியப் போக்குவரத்தாக கப்பல் உள்ளது. விமானப் பயணத்தை விட கடல்வழிப் பயணங்கள் மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதால் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரத்திலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்கு சனிக்கிழமை புறப்பட்டது. விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 என பெயரிடப்பட்ட அந்த கப்பல் 243 பேருடன் சென்றது.

BREAKING: At least 125 people are missing after the passenger ship Virgo Transport 8 lost contact in the Java Sea near South Kalimantan, Indonesia.

Authorities have rescued 115 people, while 1 person has been confirmed dead. Search and rescue operations are ongoing. pic.twitter.com/urIUSJQ0e7

— Weather Monitor (@WeatherMonitors) September 13, 2026

இந்த கப்பல் புறப்பட்ட நிலையில் அங்கு மோசமான வானிலை நிலவியது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஜாவா கடலில் அந்த இந்தோனேசிய பயணிகள் கப்பல் தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் அந்த கப்பலை மீண்டும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இந்தோனேசியா அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக அந்நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கப்பல் கடைசியாக தொடர்பை இழந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் கடைசியாக ஜாவா கடலில், பஞ்சார்மாசினில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கப்பலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, அது எங்கு உள்ளது என்பதும் தெரியவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாதுகாப்பு விதிமுறைகள் பெரிய அளவில் கடுமையாக அமல்படுத்தப்படாததால் இதுபோன்ற விபத்து விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article