India Nukes WarHeads: இந்தியா 140 முதல் 225 அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்து இருக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா வசம் 190 அணு ஆயுத ஏவுகணைகள்:

இந்தியாவின் அணு ஆயுதக் கிடங்கில் உள்ள அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி நிலையில் உள்ள 30 ஏவுகணைகளும் இதில் அடங்கும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த லாபநோக்கமற்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS), பொது தரவுகள், அரசுகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் வணிக செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுப்பாய்வுகளிலிருந்து இந்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இதற்கான குழுவில் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அணுசக்தி தகவல் திட்டத்தின் இயக்குநர் ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன், இணை இயக்குநர் மாட் கோர்டா, ஆராய்ச்சி மற்றும் திட்ட மேலாளர் மெக்கன்சி நைட்-பாயில், மற்றும் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் எலியானா ஜான்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் அணு ஆயுதங்கள் - 2026

இந்தியாவின் அணு ஆயுதங்கள் - 2026 என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ”இந்தியா தனது அணு ஆயுத கிடங்களை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. அண்மைக்காலமாக பல புதிய ஆயுத அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளதோடு, தற்போது பயன்பாட்டில் உள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட விமானங்கள், தரைவழி ஏவுதல் அமைப்புகள் மற்றும் கடல்வழி அமைப்புகளுக்குத் துணையாகவோ அல்லது மாற்றாகவோ பல அமைப்புகள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. இந்தியா 140 முதல் 225 அணு ஆயுத ஏவுகணைக்கு தேவையான ராணுவ புளூட்டோனியத்தை உற்பத்தி செய்திருக்கலாம் என்றும், 190 வரையிலானவற்றைத் தயாரித்திருக்கக்கூடும் என்றும் மதிப்பிடுகிறோம். பல ஆயுத அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதால், நாட்டின் அணு ஆயுத கையிருப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணுசக்தி ஆயுத அமைப்புகள்:

மேலும், “இந்தியா தற்போது ஒன்பது வெவ்வேறு அணுசக்தி திறன் கொண்ட அமைப்புகளை கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு விமானங்கள், ஆறு தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள், மற்றும் ஒரு கடல்வழி பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவை அடங்கும். மேலும் குறைந்தது இரண்டு ஏவுகணை அமைப்புகள் உருவாக்கத்தில் உள்ளன. அவை நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவை ஆயுதப் படைகளிடம் ஒப்படைக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணு ஆயுத அமைப்புகள்

கூடுதலாக, “அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் (HEU) மற்றும் ஆயுதத் தர புளூட்டோனியம் ஆகிய இரண்டையும் உற்பத்தி செய்வதாக நம்பப்படும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் HEU உற்பத்தி பெரும்பாலும், அதிகரித்து வரும் அணுசக்தி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எரிபொருள் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்

யுரேனியம் உற்பத்தி திறன்

இந்தியாவின் ஆயுதத் தர புளூட்டோனியத்தின் மூலமாக, மும்பை அருகே உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் அமைந்துள்ள, பழைமையான 100 மெகாவாட் (MWt) திறன் கொண்ட துருவா புளூட்டோனியம் உற்பத்தி உலையும், 2010 வரை அதே இடத்தில் இருந்த CIRUS உலையும் இருந்து வந்தன. பத்தாண்டுகளுக்கும் மேலான தாமதங்களுக்குப் பிறகு, கல்பாக்கம் அருகே உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் புதிய 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக இனப்பெருக்க உலை (PFBR). ஏப்ரல் 2026-ல் முதல் நிலையை எட்டியது. இந்தியாவின் முதல் தலைமுறை மின் உலைகளிலிருந்து பிரிக்கப்பட்ட, உலைத் தர புளூட்டோனியத்தின் இருப்பை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இந்த புதிய உலை, யுரேனியம் அல்லது தோரியம் எனும் ஒரு "போர்வை" மீது கதிர்வீச்சு செலுத்தி புளூட்டோனியம்-239 மற்றும் யுரேனியம்-233-ஐ உற்பத்தி செய்கிறது. 80% செயல்திறனில் இயக்கப்பட்டால், இந்த PFBR உலையானது, கோட்பாட்டு ரீதியாக ஆண்டுக்கு சுமார் 140 கிலோ புளூட்டோனியம்-239-ஐ உற்பத்தி செய்யக்கூடும். இது 35 அணு ஆயுதங்களை தயாரிக்க போதுமானதாக இருக்கும்” எனவும் ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article