EPFO டிஜிட்டல் புரட்சி: பிஎஃப் தகவல்கள் இனி வாட்ஸ்அப்பில்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

EPFO டிஜிட்டல் புரட்சி: பிஎஃப் தகவல்கள் இனி வாட்ஸ்அப்பில்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
News Image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO லட்சக்கணக்கான உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி பிஎஃப் தகவல்களையும் சேவைகளையும் நாம் ஒரு கிளிக்கிலேயே பெற்று கொள்ள முடியும்.

பிஎஃப் சந்தாதாரர்களுக்காக ஈபிஎஃப்ஓ அமைப்பு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் தொடர்பான தகவல்களை நேரடியாக வாட்ஸ்அப் மூலமாகவே பெற்று கொள்ள முடியும். ஈபிஎஃப்ஓ அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கப்பட்டதை அறிவித்துள்ளது. எனவே பயனர்கள் எந்தவொரு சிக்கலான வலைத்தளங்களுக்கோ அல்லது ஆப்ஸ்களுக்கோ செல்லாமல், தங்களுக்கு தேவையான முக்கியமான பிஎஃப் அப்டேட்டுகள் மற்றும் பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் வாட்ஸ்அப்பில் பெற முடியும். பிஎஃப் சந்தாதாரர்கள் இந்த வாட்ஸ் அப் சேனலை லைக் செய்து வைத்து கொண்டால் போதும் அனைத்து பிஎஃப் அப்டேட்களும் உங்களுக்கு வாட்ஸ் அப்பிலேயே தெரிந்து விடும்.

இந்த வாட்ஸ்அப் சேனல் வெறும் அறிவிப்புகளை மட்டும் வழங்குவதோடு நிற்காமல், உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பயனுள்ள கல்விசார் இணைப்புகளையும் யூடியூப் வீடியோக்களையும் பகிரும். இதில் குறிப்பாக பிஎஃப் முன்பணம் (அட்வான்ஸ்) எடுக்கும் முறை குறித்த வழிகாட்டுதல்கள், வேலை மாறிய பிறகு மீண்டும் பணியில் சேரும்போது ஈபிஎஃப் பங்களிப்பை தொடர்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோக்களும் அடங்கும். ஈபிஎஃப்ஓ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் வாட்ஸ்அப் சேனலுக்கான நேரடி இணைப்பையும் கியூஆர் கோடையும் பகிர்ந்துள்ளது.

எனவே நீங்கள் அந்த அதிகாரப்பூர்வ இணைப்பை (https://www.whatsapp.com/channel/0029Vb6kmH48Pgs8ftd6Kw3Y) கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது கியூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ ஈபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் எளிதாக இணைந்து கொள்ளலாம். ஈபிஎஃப்ஓ-வின் உண்மையான அதிகாரப்பூர்வ சேனலில் மட்டுமே இணைய வேண்டும் என்றும், பிஎஃப் சேவைகளை வழங்குவதாக கூறி ஏமாற்றும் போலி கணக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் சேனல், ஈபிஎஃப்ஓ தனது சேவைகளை மேலும் எளிமையாக்க மேற்கொண்டு வரும் டிஜிட்டல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் பெருமளவில் மாற்றப்பட்டு டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிஎஃப் முன் பணம் எடுக்க ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்வது, யுஏஎன் நம்பர் ஆக்டிவேட் செய்வது என பெரும்பாலான பிஎஃப் சேவைகளை நாம் டிஜிட்டல் முறையிலேயே பெற முடிகிறது.கூடிய விரைவில் ஈபிஎஃப்ஓ 3.0 அப்டேட் மூலம் நம் வங்கி கணக்கை டிஜிட்டல் முறையில் எப்படி கையாளுகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கையும் கையாளும் முறை வர உள்ளது. இதன்படி பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் யுபிஐ மற்றும் ஏடிஎம் வாயிலாக எடுத்து பயன்படுத்தலாம். விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks