Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?

Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
News Image

Dharapuram By-Election 2026: பொதுத் தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சத்யபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல்:

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சத்யபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால் காலியான அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் தாராபுரம் தொகுதி எப்படி? யாருக்கு சாதகம்? வாக்காளர் விவரங்கள், தவெக முதல்முறையாக அந்த தொகுதியில் வெற்றிக்கொடியை நாட்டுமா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

தாராபுரம் தொகுதி எப்படி?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனி தொகுதியான தாராபுரம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் கூட அதிமுக வேட்பாளர் தான் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொங்கு பகுதியை சேர்ந்த இந்த தொகுதியில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம் பெரும்பான்மையானதாக உள்ளது. இதுபோக பட்டியல் சமூகத்தினர், முதலியார் மற்றும் செட்டியார் சமூக மக்களும் இங்கு கணிசமாக வசித்து வருகின்றனர். விவசாயம், ஜவுளி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவை இந்த தொகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன.

தாராபுரம் - அதிமுகவின் கோட்டை

கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாராபுரம் தொகுதியில் இதுவரை, 17 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒட்டுமொத்தமாக 6 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த 20 வருடங்களில் இரண்டு முறை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி நான்கு முறையும், பாமக ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளது. கொங்கு மண்டலம் ஒட்டுமொத்தமாகவே அதிமுகவின் கோட்டையாக கருதப்படுவதால், தாராபுரமும் அதிமுக வலுவாக உள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது.

தாராபுரம் வாக்காளர்கள்:

தாராபுரத்தில் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் ஆண்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் பெண்களும், ஒற்றை இலக்கில் மூன்றாம் பாலினத்தவரளும் உள்ளனர். இவர்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 89.96 சதவிகிதம் பேர் அதாவது ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 944 பேர் வாக்களித்தனர். பதிவான வாக்குகளில் 40.56 சதவிகிதம் அதாவது 80 ஆயிரத்து 248 வாக்குகளை பெற்று, அதிமுகவின் சத்யபாமா வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி 63 ஆயிரத்து 336 வாக்குகளையும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46 ஆயிரத்து 99 வாக்குகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்

தாராபுரம் - முக்கிய பிரச்னைகள்

இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக காங்கேயம் அல்லது உடுமலைப்பேட்டைக்குச் செல்ல வேண்டியுள்ளதால், தாராபுரம் நகராட்சிப் பகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது

தாராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய நவீன மருத்துவ வசதிகள் இல்லாததால், அவசர சிகிச்சை மற்றும் தீவிர நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற மக்கள் திருப்பூர் அல்லது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது

விவசாயமும், நெசவுத் தொழிலும் பிரதானமாக இருந்தாலும் போதிய நீர்ப்பாசன வசதிகள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களுக்கான போதிய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது

இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?

அதிமுக: தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அதிமுக உறுதி செய்துள்ளது. உட்கட்சி பூசலில் சிக்கியுள்ள அக்கட்சி மீண்டும் வலுப்பெற இந்த இடைத்தேர்தல் வெற்றியை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறது. பாரம்பரியமான வாக்குவங்கி தங்களுக்கு கைகொடுக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் விஜய் அலை வீசியபோதும், அதிமுக வேட்பாளரே பொதுத்தேர்தலின் போது இங்கு வெற்றி பெற்றார். அதேநிலையை தக்கவைத்து தனது கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்த தவெகவிற்கு பாடம் புகட்ட எடப்பாடி தீவிரம் காட்டுகிறார்.

திமுக: இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவை திமுக இன்னும் அறிவிக்கவில்லை. பலமுனை போட்டி தவெகவிற்கு சாதகமாக அமையக்கூடும் என்பதால், தேர்தலை புறக்கணித்து மறைமுகமாக அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்தும் அறிவாலயம் பரிசீலித்து வருகிறதாம்.

தவெக: கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி நடத்தி வரும் தவெக தனது சொந்த பலத்தை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டியுள்ளது. புதுக்கட்சியாகவே 46 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது ஆட்சி அதிகாரம், அமைச்சரவையில் பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கூடுதல் பலமாக அமையும் என பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks