Coimbatore Airport: கோயம்புத்தூருக்கு அடிச்சது ஜாக்பாட் - 1,047 ஏக்கர், ரூ.2,136 கோடி செலவில் மெகா திட்டம் - முழு விவரம்

Coimbatore Airport: கோயம்புத்தூருக்கு அடிச்சது ஜாக்பாட் - 1,047 ஏக்கர், ரூ.2,136 கோடி செலவில் மெகா திட்டம் - முழு விவரம்
News Image

Coimbatore Airport Expansion: கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கும் திட்டத்திற்கு, செலவினங்கள் தொடர்பான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டம்:

கோயம்புத்தூர் விமான நிலையமானது 16 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இங்கிருந்து மும்பை, டெல்லி மற்று பெங்களூரு போன்ற முக்கிய வணிக நகரங்களுக்கு மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளான சிங்கப்பூர் மற்றும் அபுதாபி போன்றவற்றிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. வர்த்தக போக்குவரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே ஒரு ஒருங்கிணைக்கபட்ட முனையம் மட்டுமே, உள்ளூர் மற்றும் வெளிநாடு என இரண்டு வகையான விமான பயணிகளையும் கையாண்டு வருகிறது. அதிகரித்து வரும் பயனர்களின் கருத்தில் கொண்டு இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது அவசியம் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் தான், கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிதி ஆயோக் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விமான நிலையம் - 1047 ஏக்கர் மெகா திட்டம்

இதுதொடர்பாக பேசிய கோயம்புத்தூர் விமான நிலைய இயக்குனர் மொகமது ஆரிஃப், நிதி ஆயோக் அமைப்பின் ஒப்புதலை தொடர்ந்து, செலவினங்கள் தொடர்பான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விரிவாக்க திட்டத்திற்காக ஏற்கனவே விமான நிலையம் உள்ள 420 ஏக்கருடன், கூடுதலாக 627 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதனால் திட்டம் முடிவடையும் போது விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு ஆயிரத்து 47 ஏக்கராக உயரும். 621 ஏக்கர் நிலம் ஏற்கனவே விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி கட்டத்தில் திட்ட பணிகள்:

மேலும், “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உத்தரவின்படி விமான நிலையம் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இறுதி அனுமதியைப் பெறும் நடைமுறை இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதனிடையே, உள்நாட்டுப் பாதுகாப்பு சோதனைப் பகுதியில் உள்ள நெரிசலைக் குறைக்கும் வகையில், தற்போது சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என மொகம்மது ஆரிஃப் குறிப்பிட்டார். தற்போதுள்ள 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான முனையம் ஆண்டுக்கு சுமார் 36 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கட்டு 35 லட்சம் பேரை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.2,136 கோடி பட்ஜெட்:

விமான நிலையத்தின் பயணிகளின் கையாளும் திறன் குறித்து குறித்து பேசுகையில், தற்போது ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளை கையாளும் திறன் மட்டுமே கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு உள்ளது. அதனை மேம்படுத்தி ஆண்டுக்கு 1.20 கோடி பயணிகளை  கையாளும் திறனை பெறும் வகையில், 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் ரூ.2.136 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய முனைய அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். தொழில்நுட்ப அனுமதிகளைப் பொறுத்தவரை, விரிவாக்கத் திட்டமானது ஏறக்குறைய 75% முதல் 80% வரையிலான இணக்க நிலையை எட்டியுள்ளது எனவும், பணிகள் தொடங்கியதிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் இந்த விரிவாக்கம் நிறைவடையும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - நேரம், வீதி உலா, பாதுகாப்பு ஏற்பாடு விவரம்

கோவைக்கான பலன் என்ன?

கோவை விமான நிலையத்தின் புதிய முனையமானது B777 விமானம் நிறுத்தக்கூடிய வகையில் 3.81 கி.மீ நீளமுள்ள விரிவாக்கப்பட்ட ஓடுபாதை, 14 புதிய விமான நிறுத்துமிடங்கள்,
25,000 மெட்ரிக் டன் சரக்குக் கொள்ளளவு ஆகிய உட்கட்டமைப்புகளை பெற உள்ளது.

ஓடுபாதையை நீட்டிப்பது, பெரிய ரக விமானங்கள் தரையிறங்க வழிவகுக்கிறது. இது உள்ளூர் தொழில்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளுடனான  இணைப்பை மேம்படுத்துகிறது.

ஒரு பெரிய சரக்கு முனையம் என்பது கொங்கு பிராந்தியத்தில் உற்பத்தி மற்றும் புத்தொழில் நிறுவனச் செயல்பாடுகளுக்கான தளவாடங்களை மேம்படுத்துகிறது

தற்போதைய முனையத்தை விட நான்கு மடங்கு பெரிய புதிய ஒருங்கிணைந்த முனையம், புதிய ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களுடன் இணைந்து கட்டப்படுவதால், ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும்

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கலப்பட்டி, நீலாம்பூர், இருகூர் மற்றும் சிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துக்களுக்கான தேவை அதிகமாக உள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் வளமடையும்

புதிய 200 அடி சாலையானது, முனையத்தை சேலம்–கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள எல்&டி புறவழிச்சாலையுடன் நேரடியாக இணைத்து, அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks