இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில். உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு திருவிழா என்பதால் மொத்த மதுரையும் திருவிழா கோலத்தில் உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

பெருமகிழ்ச்சி:

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர்களின் உன்னத அடையாளம்:

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி…

— CMOTamilNadu (@CMOTamilnadu) September 16, 2026

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சிறப்பு பேருந்துகள்:

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் மதுரைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல்குமார் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கின்றனர். மேலும், அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Source: Read Full Article