CM Vijay: விஜய்யை நடிகராக்க விரும்பாத எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா! தளபதியே மனம் திறந்த தருணம்!

CM Vijay: விஜய்யை நடிகராக்க விரும்பாத எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா! தளபதியே மனம் திறந்த தருணம்!
News Image

முதலமைச்சர் விஜய் நடிகராக தனது திரை வாழ்க்கையை தொடங்கியபோது அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் எப்படி நடிக்க வந்தார்? என்பதை அதில் தெரிவித்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

நடிக்க வந்தது எப்படி?

நான் ஸ்கூல் படிச்சது பாலலோக் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படிச்சேன். அடுத்து கல்லூரி பி.எஸ்.சி. விஸ்காம் படித்தேன். என் குடும்பத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எங்க அப்பா ஒரு இயக்குனர். எங்க அம்மா ஒரு பாடகி. எங்க மாமா சுரேந்தர் ஒரு பாடகர். மோகனுக்கு குரல் கொடுத்திருப்பார். அதனால் நானும் நடிக்குற படத்தில் கேள்வி ஞானத்தில் எல்லாம் ஒரு பாடல் பாடுகிறேன்.

அடுத்து இந்த துறையில் நான் எப்படி வந்தேன் என்று கேட்டீர்கள் என்றால், எனக்கு இந்த நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததே திடீர்னு வந்தது. 11ம் வகுப்பு படிக்கும்போது வந்தது. ஏனென்றால், நான் படிப்பில் மிகவும் சுமார்தான். படிச்சுட்டு என்ன பண்ணப்போறேனு எனக்குத் தெரியவில்லை. நாம ஏன் நடிக்கக்கூடாதுனு அப்படினு ஒரு ஆசை.

விருப்பம் இல்லை:

Vintage thalapathy ❤️🔥😍 pic.twitter.com/nA4w9jQDhA
— GKB (@GKBvgks) September 20, 2026

12ம் வகுப்பு முடிச்சுட்டு என்னோட காலேஜ் முதல் வருடத்தில் என்னோட அப்பா, அம்மாகிட்ட நடிக்கப்போறேனு சொன்னேன். அவங்க இரண்டு பேருக்கும் அதில் விருப்பம் இல்லை. இது மிகவும் பயங்கரமான துறை. இதில் வருவது ரொம்ப கஷ்டம் என்றேன்.

நான் ரொம்ப பிடிவாதமாக இருந்தேன். எங்க அப்பா சொன்னாரு நீ ரொம்ப செல்லப்பிள்ளை. ரொம்ப செல்லமா வளத்துட்டோம். வெயில்லயும், மழையிலயும் கஷ்டப்படனும், உன்னால அது முடியாது. இல்லப்பா எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் பண்றேன். அதன்பிறகு அவர்கள் ஒத்துக்கொண்டு ஒரு 6, 7 மாசம் சினிமாவுக்குத் தேவையான பயிற்சி, டான்ஸ் கற்றுக் கொடுத்தார்கள். அப்புறம் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தினார்கள்.

நிறைவேற்றிய பெற்றோர்கள்:

அந்த படம் வியாபார ரீதியாக பெருசா கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு ரசிகர்கள் கிடைச்சார்கள். எங்க அப்பா, அம்மாவோட ஆசை என்னை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவர்களின் ஆசையை நான் நிறைவேற்றவில்லை என்றாலும் நான் நடிகனாக வேண்டும் என்ற ஆசையை அவர்கள் நிறைவேற்றி வைத்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் டூ முதலமைச்சர்:

நடிகராக சிறு வயதிலே அவரது தந்தை இயக்கிய படங்களில் நடித்து வந்த விஜய்க்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைத் தந்த படம் பூவே உனக்காக. பின்னர், அவர் குடும்ப படங்களில் கவனம் செலுத்தி அவர் ஏராளமான குடும்ப ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். பின்னர், கில்லி படம் மூலமாக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கினார்.

இதன்பிறகு தொடர்ந்து ஆக்ஷன் படங்களான திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, வேலாயுதம், கத்தி, மெர்சல், சர்க்கார், தெறி என படங்களில் நடித்து உச்சநட்சத்திரமாக உயர்ந்தார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி தான் சந்தித்த முதல் தேர்தலிலே வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks